(நெவில் அன்தனி)
பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் கடைசி நாளான இன்று (03) நிறைவுக்கு வந்த 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்டெக்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
டெஸ்ட் தொடர் ஒன்றில் பாகிஸ்தானை பங்களாதேஷ் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.
இதே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை சகலதுறைகளிலும் விஞ்சும் வகையில் விளையாடி வெற்றியை சுவைத்தது.
இப் போட்டியில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை 4ஆம் நாளனான நேற்று மாலை தொடங்கிய பாகிஸ்தான், ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை பங்களாதேஷ் தொடர்ந்தபோது, ஆரம்ப வீரர்களான ஸக்கிர் ஹசன் (40), ஷத்மான் இஸ்லாம் (24) ஆகிய இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (70 - 2 விக்.)
எனினும் அணித் தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ (38), மொமினுள் ஹக் (34), முஷ்பிக்குர் ரஹிம் (22 ஆ.இ.), ஷக்கிப் அல் ஹசன் (21 ஆ.இ.) ஆகியோர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷின் வெற்றியை உறுதி செய்தனர்.
பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர்கள் பத்து விக்கெட்களையும் பகிர்ந்தது விசேட அம்சமாகும். பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியது இதுவே முதல் தடவையாகும்.
தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 24 வயதான ஹசன் மஹ்முத் முதல் தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 274 (சய்ம் அயூப் 58, ஷான் மசூத் 57, சல்மான் அகா 54, மெஹிதி ஹசன் மிராஸ் 61 - 5 விக்., தஸ்கின் அஹ்மத் 57 - 3 விக்.)
பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 262 (லிட்டன் தாஸ் 138, மெஹிதி ஹசன் மிராஸ் 78, குரம் ஷாஹ்ஸாத் 90 - 6 விக்., சல்மான் அகா 13 - 2 விக்., மிர் ஹம்ஸா 50 - 2 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (சல்மான் அகா 47 ஆ.இ., மொஹம்மத் ரிஸ்வான் 43, ஹசன் மஹ்முத் 43 - 5 விக்., நஹித் ரானா 44 - 4 விக்.)
பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 185 ஓட்டங்கள்) 185 - 4 விக். (ஸக்கிர் ஹசன் 40, நஜ்முல் ஹசன் ஷன்டோ 34)
ஆட்டநாயகன்: லிட்டன் தாஸ்: தொடர்நாயகன்: மெஹிதி ஹசன் மிராஸ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM