பிரிந்து சென்ற தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இணைத்துத்தருமாறு கோரி நபர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் மேற்கொண்டமையால் வவுனியா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்றையதினம் காலை வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவரை தன்னுடன் மீண்டும் இணைத்துவைக்குமாறு தெரிவித்துள்ளார்.
நீண்டநேரமாக மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது.
பின்னர் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மரத்தில் இருந்து கீழே இறங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM