தலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் தொழில் செய்துக்கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும்  பெண் தொழிலாளர்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.