இன்றைய சூழலில் தன வரவை அதிகம் எதிர்பார்க்கிறோம். ஆனால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செல்வம் சேருவதில்லை.
மாத சம்பளத்திற்கு வேலை செய்பவர்களுக்கு ஊதியத்தை தவிர வேறு வகைகளில் தன வரவு என்பது இருப்பதில்லை.
குறிப்பாக பகுதி நேரமாக பணியாற்றினாலும் அதற்கான தொகை நினைத்தது போல் கிடைப்பதில்லை.
இதனால் உங்களது உழைப்பு மற்றவர்களால் தெரிந்தே சுரண்டப்படுகிறது. இதற்கு தீர்வே இல்லையா..! என நீங்கள் எண்ணலாம்.
வேறு சிலர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினாலும் பணி சுமைகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஏதேனும் பகுதி நேர பணியை ஆத்ம திருப்திக்காக செய்தாலும் அதிலிருந்தும் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச பணமும், அங்கீகாரமும், கௌரவமும் கிடைப்பதில்லை.
இதனால் மனதளவில் சோர்வு ஏற்பட்டு, எம்முடைய வாழ்க்கையில் ஒரு எல்லைக்கு மேல் தன வரவு என்பது இருக்கவே இருக்காதா..!! என கவலை அடைய தொடங்குவர்.
இந்த தருணத்தில் நிர்ணயிக்கப்பட்ட தன வரவை விட கூடுதலாக தன வரவு வேண்டும் என விரும்புபவர்களுக்காக எம்முடைய முன்னோர்கள் இதற்காக பரிந்துரை செய்திருக்கும் சில நுட்பமான பரிகாரங்களை உறுதியாக கடைப்பிடிக்க தொடங்கினால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதுடன் தன வரவு அதிகரித்து வருவதை அனுபவத்தில் காணலாம்.
முதலில் மந்திர உச்சாடன பரிகாரத்தை காண்போம். பின்வரும் மந்திரத்தை வளர்பிறையில் இருந்து மூன்றாவது நாள் அதாவது மூன்றாம் பிறையிலிருந்து தொடங்கி வளர்பிறை நிறைவடையும் நாள் வரை நாளாந்தம் 21 முறை காலை வேளைகளில் நீராடிய பிறகு இறைவனை வழிபடும் தருணத்தில் உச்சரிக்க வேண்டும்.
இதனை தொடக்கத்தில் உச்சரிக்கும் போது உச்சரிப்பு தெளிவாக இல்லையே என கவலைப்பட வேண்டாம்.
பழகப் பழக இவை வழக்கத்திற்குள் வந்துவிடும். மூன்று வளர்பிறை நாட்களுக்குள் அதாவது மூன்று மாதத்தின் வளர்பிறை நாட்களுக்கு இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் உங்களுக்கு இயல்பாக கிடைக்கும் தன வரவை விட.. கூடுதலாக வேறு வகையிலிருந்து பண வரவு வருவதை அனுபவத்தில் கண்டு மகிழலாம்.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நீங்கள் நல்லெண்ணெய் தேய்த்து, வெந்நீரில் நீராடுவதை வழக்கமாக கொண்டிருந்தால் அது உங்களது உடலுக்கு ஆரோக்கியமான விடயம். இதனை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
பாரம்பரியமான முறையில் சனிக்கிழமைகளில் நீராடுபவர்களும் தன வரவிற்காக இத்தகைய குளியல் பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.
அதாவது சனிக்கிழமைகளில் நீங்கள் நீராடுவதற்கு முன் நீராடுவதற்காக தெரிவு செய்து வைத்திருக்கும் நீரில், சில துளிகள் கற்பூர எண்ணெய்யை கலந்து அந்த நீரில் நீராடுங்கள்.
கற்பூர எண்ணெய் கலந்த நீர் உங்களது உடலில் படும் போது புறத்திலும், அகத்திலும் உங்களை ஆக்கிரமித்திருக்கும் கண்ணுக்கு புலப்படாத எதிர்மறை ஆற்றல்கள் விலகும். நீங்கும். அவை தண்ணீருடன் கலந்து வெளியேறிவிடும்.
இதனைத் தொடர்ந்து உங்களுக்கான கூடுதல் தன வரவு குறித்த விவரங்களும், செய்திகளும், குறிப்புகளும் உங்களை வந்தடையும். அதன் பிறகு அதற்கான பணிகளை நிறைவேற்றி தனத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
மந்திர உச்சாடனம் -சூடம் ஏற்றுதல் - குளியல் ஆகிய மூன்று பரிகாரங்களையும் ஏக காலத்திலும் நீங்கள் மேற்கொள்ளும்போது குறிப்பாக வளர்பிறையில் மேற்கொள்ளும் போது உங்களுக்கான தன வரவு எப்போதும் இருப்பதை விட கூடுதலாக வருவதை அனுபவத்தில் கண்டு மகிழலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM