புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேசன் தெரபி, டார்கெட்டட் தெரபி, இம்யூனோ தெரபி என பல்வேறு சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மூளை மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கும், புற்று நோய் அல்லாத கட்டிகளுக்கும் சிகிச்சை அளிக்க தற்போது ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ சர்ஜேரி எனும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய மூளை, கழுத்து, முதுகுத்தண்டு, நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள், புற்று நோய் அல்லாத கட்டிகள் மற்றும் ஏனைய சிக்கலான பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ சர்ஜேரி எனும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை துல்லியமாக செயல்பட்டு பலனளித்து வருகிறது
இது சத்திர சிகிச்சை அல்ல. இந்த சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கட்டியின் மீது துல்லியமாகவும், கணினி உதவியுடன் அந்த கட்டியின் முப்பரிமான புகைப்படத்தினை பயன்படுத்தி, அந்த கட்டியை சுற்றி இருக்கும் ஆரோக்கியமான திசுக்களில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தப் பகுதியில் வீரியமிக்க செறிவூட்டப்பட்ட கதிர்வீச்சு செலுத்தப்படுகிறது.
மேலும் இத்தகைய சிகிச்சையின் போது புற்றுநோய் செல்களின் மரபணு சேதப்படுத்தப்படுகிறது. மேலும் இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு அந்த செல்களால் இனப்பெருக்கம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு, அந்த கட்டிகள் சுருக்கமடைகின்றன.
பொதுவாக இத்தகைய நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூளை மற்றும் முதுகெலும்பு பகுதியில் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரே அமர்வின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, நிவாரணம் அளிக்கப்படுகிறது.
அதே தருணத்தில் உடலின் உள் உறுப்புகளான நுரையீரல், கல்லீரல், அட்ரீனல் போன்ற பகுதியில் ஏற்படும் மென்மையான திசு கட்டிகளை அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இதன் போது ஒரே அமர்வு அல்லாமல் சில அமர்வுகளில் நிவாரணம் வழங்கப்படுகிறது.
வைத்தியர் நரசிம்மைய்யா
தொகுப்பு அனுஷா .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM