ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் 'கடைசி உலக போர்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

03 Sep, 2024 | 01:33 PM
image

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கடைசி உலகப் போர்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கடைசி உலக போர்' எனும் திரைப்படத்தின் ஹிப் ஹாப் தமிழா ஆதி, அனகா, நாசர், நட்டி என்கிற நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம் புலி, ஹரிஷ் உத்தமன், இளங்கோ குமரவேல், அழகம் பெருமாள், 'தலைவாசல்' விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.

  இந்த திரைப்படத்தை ஹிப் ஹாப் தமிழா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் 'கடைசி உலக போர்' எனும் இத்திரைப்படத்தின் பிரத்யேக காணொளி ,பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களும், நடிப்பில் வெளியான திரைப்படங்களும் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெறாததால் அவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் தயாராகி இருக்கும் 'கடைசி உலக போர்' எனும் திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே போதிய ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்வீட்டி நாட்டி கிரேசி - திரைப்பட...

2026-02-13 16:00:22
news-image

மை லார்ட் - திரைப்பட விமர்சனம்

2026-02-13 15:47:01
news-image

மைலாஞ்சி - திரைப்பட விமர்சனம்

2026-02-13 15:43:54
news-image

டொவினோ தோமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின்...

2026-02-13 15:29:56
news-image

மீண்டும் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த் -...

2026-02-13 15:07:24
news-image

ஓகஸ்ட்டில் வெளியாகும் நானி நடிக்கும் 'தி...

2026-02-13 13:08:42
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45