இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

03 Sep, 2024 | 10:47 AM
image

ஜா - எல  மற்றும் கொழும்பு ஜிந்துப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கடந்த ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி ஜா - எல பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை மற்றும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கொழும்பு ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கடந்த 27 ஆம் திகதி பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த வெலிசர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்போது, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கொலை சம்பவங்களுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேகடன மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 மற்றும் 30 வயதுடைய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே அஜித் மன்னம்பெருமவுக்கு வேட்புமனுவில்...

2024-10-13 19:23:56
news-image

ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

2024-10-14 02:42:39
news-image

இந்த மண்ணில் தமிழரசுக்கட்சியினால்தான் தமிழ் மக்கள்...

2024-10-14 02:23:21
news-image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு...

2024-10-14 02:07:52
news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57