'டெங்குவால் வைத்தியசாலையில் இருந்த நான் சம்பவத்தை அறிந்து வீட்டில் இருந்த கணவருக்கு கோல் பண்ணினேன்.." : மீதொட்டமுல்ல சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்களின் உள்ள குமறல்கள்

22 Apr, 2017 | 10:25 AM
image

(எம்.சி.நஜிமுதீன்)

'டெங்குவால் உயிர் தப்பினேன்"

டெங்கு நோயால் பிடிக்கப்பட்டு அண்மைக்காலமாக நான் அவதிப்பட்டேன். வைத்தியசாலையில் தங்கிருந்து சிகிச்சைபெறுவதற்கு விருப்பமில்லாத என்னை எனது கணவர் வற்புறுத்தி வைத்தியசாலையில் அனுமதித்தார். எனினும் அவரின் வற்புறுத்தல் தன்னை மரணத்திலிருந்து தப்பிக்கவைத்ததாக குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் எற்பட்ட அனர்த்தத்தில் வீடு சேதமடைந்து டெரன்ஸ் வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் கயணி என்பவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சித்திரைப் புத்ததாண்டு தினம் நான் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வந்தேன். அன்று மாலை வேளையில் மீதொட்டமுல்லயிலுள்ள குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் ஏற்பட்ட அனர்தம் தொடர்பில் கேள்விப்பட்டு அதிர்ந்து போனேன். 

பதட்டத்துடன் உடனடியாக எனது கணவருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தினேன். ஆனால் எனது கனவர் மறுமுனையில் கதைத்தார். பதட்டம் சற்று தணிந்தது. அனர்த்தம் இடம்பெற்றபோது அவர் எமது வீட்டில் இருந்துள்ளார்.  வெளியில் அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது அப்பிரதேச வீடுகள் இடிந்து நொருங்குவதைக் கண்டு அவர் வீதிக்கு வந்து தப்பித்துக் கொண்டுள்ளார். 

எனினும் எமது வீடு அனர்த்தத்தின்போது சேதமடைந்து விட்டது.  ஆகவே டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நான் வீட்டில் இருந்திருப்பின் சம்பவம் இடம்பெற்றபோது தூங்கிக்கொண்டிருந்திருப்பேன். ஆகவே அனர்த்தத்திலிருந்து மீண்டு வரமுடியாது அதில் சிக்கியிருக்கலாம். எமது வீடு சேதமடைந்துள்ளதால் நாம் இங்கு தங்கிருந்தாலும் உயிர் பிழைத்ததையிட்டு சந்தோஷமடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிடார்.

 

சகோதரியின் அரவணைப்பு விரைவில் 

அறுந்துபோகுமென கனவிலும் எதிர்பார்க்கவில்லை 

எனது சகோதரி எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவர். எனினும் அவரின் அரவணைப்பு விரைவில் அறுந்துபோகும் என நான் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே எனது இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டே சகோதரியின் இழப்பைத் தாங்கிக்கொண்டிருப்பதாக மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் ஏற்பட்ட அனர்த்தத்தில் தனது மூத்த சகோதரியை பறிகொடுத்த சமீலா என்பவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

கடந்த சித்திரைப் புத்தாண்டு தினம் எமது வாழ்க்கையில் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது. அதிலிருந்து மீளுவது இலகுவான விடயமல்ல. தேகாரோக்கியத்துடன் இருந்த எனது சகோதரி திடீரென மண்ணுக்குள் புதைந்து விட்டார். 

எனினும் அவருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் பாடசாலைக்கச் செல்கின்றனர். அவர்களை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.  சகோதரியின் இழப்புக்கு எவ்வளவு நஷ்டஈடு கொடுத்தாலும் அதன் மூலம் நாம் திருப்திப்படப்போவதில்லை. ஏனெனில் அவர் எனக்கு விலை மதிக்க முடியாத ஒருவர். 

மேலும் தாய்மீது அளவு கடந்த அன்புகொண்டுள்ள அவரது இரு பிள்ளைகளையும் சமாதானப்படுத்தி வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

குப்பையை வைத்து வருமானம் ஈட்டியவர்கள்

அப்பாவி உயிர்களை பறித்து விட்டார்கள்

மீதொட்டமுல்லயில் குப்பை கொட்ட வேண்டாம் என நீண்ட காலம் கோரிக்கை விடுத்து வந்தோம். அக்கோரிக்கை சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்கு எட்டவில்லை. ஏனெனில் அவர்கள் குப்பையை வைத்து வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் பண ஆசை பல அப்பாவி உயிர்களைக் குடித்து விட்டதாக அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட  யோஹான் என்பவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இப்பிரதேச மக்கள் நீண்ட காலமாக இங்கு குப்பை கொட்ட வேண்டாம் எனத் தெரிவித்து வந்தனர்.  அதற்காக பல்வேறுபட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தனர். அப்போராட்டங்களை பொலிஸாரைக்கொண்டு தடுத்தனர். ஆனால் தற்போது பாரிய அனர்த்தம் ஏற்பட்டு பல உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு விட்டன.

மேலும் குப்பைகளை வைத்து வருமானம் தேடியவர்கள் இதேபோன்று இன்னுமின்னும் தவறான வழியில் பணம் தேடிக்கொள்வார்கள். அவர்களுக்கு அப்பாவி உயரிகள் பற்றி எவ்வித கரிசனையும் இல்லை. ஆனால் அனர்த்தத்தில் எமது வீடு சேதமடைந்துள்ளதுடன் தொழில் செய்த லொறி மற்றும் முச்சக்கர வண்டியையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன். இனி எவ்வாறு எனது தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையை கொண்டு நடத்துவது?

எனது இரு வாகனங்களும் முழுமையாக சேதமடைந்து விட்டன. அதற்கு அரசாங்கத்தால் முழுமையான நஷ்டஈடு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு கிடைப்பதானாலும் அதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும். ஆகவே நான் மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாழ்க்கையை அரம்பிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

  

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்னர்

இறுதிக்கிரியை நடத்தி விட்டோம்

வழமைபோன்று இவ்வருடமும் சித்திரைப் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை கடந்த சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். எனினும் ஒழுங்குசெய்தவாறு  சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கு முன்னர் ஏற்பாட்டுப்  பணிகளில் ஈடுபட்டிருந்து பலருக்கு இறுதிக் கிரியை நடத்த வேண்டிய  சோகம் ஏற்பட்டுவிட்டதக குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்ப்பட்டு டெரன்ஸ் வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் தர்ஷிகா தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

எமது தெருவில்லுள்ளவர்கள் அனைவரும் ஒரே குடும்பம்போல் வாழ்ந்து வந்தோம். எந்தவொரு வைபவமானாலும் நாம் அனைவரும் இணைந்தே பணியாற்றுவோம். எனினும் அவ்வாறானவர்கள் பலரை சித்திரைப்புத்ததாண்டு தினம் ஏற்பட்ட அனர்த்தத்தின்போது இழந்து தவிக்கிறோம்.

மேலும் எமது வீட்டில் நானும், கணவர், தங்கை, அவளது கணவர் மற்றும் எமது தயும் உள்ளோம்.  புத்தாண்டு தினத்தில் நாம்  வீட்டில் இருக்காது வெளியில் சென்று விட்டோம். அதனால் தப்பித்துக்கொண்டோம்.

ஆனபோதிலும் எமது வீடு சேதமடைந்துள்ளது.  ஆகையினால் தற்காலிக முகாமில் தங்கியுள்ளோம். இங்கு  அதிகளவானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே தங்கியிருப்பவர்களுக்கு இடவசதி போதுமானதாக இல்லை. மேலும் இரவுப்பொழுதை இங்கு கழிப்பதென்பது மிகவும் கடினமானது. எனவே விரைவில் எமக்கு வீடுகளை வழங்கி அங்கு குடியேற்றி எமது அன்றாட வாழ்வை கொண்டு நடத்துவதற்கு வழிசெய்யுமாறு வேண்டிக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53