உருக்குக் கம்பிகள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் IWW Steel கம்பனி லிமிட்டெட், புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பு செய்திருந்தது.

இந்நிகழ்வு உஸ்வெடகெய்யாவ பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த பாடசாலை உபகரணங்களுக்கான சகல செலவுகளையும் கம்பனியின் தலைமை அதிகாரி கலாநிதி. சிவலிங்கம் ரமேஷ் பொறுப்பேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.  

IWW Steel நிறுவனத்தின் தலைமை அதிகாரி கலாநிதி. சிவலிங்கம் ரமேஷ் கருத்துத் தெரிவிக்கையில்,

“மிகவும் குறுகிய காலப்பகுதியினுள் இலங்கையில் காணப்படும் முன்னணி உருக்குக் கம்பிகள் உற்பத்தி நிறுவனமாக IWW Steel கம்பனி தெரிவாகியுள்ளதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த வெற்றிகரமான செயற்பாட்டின் பின்னணியில் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னார்வமான செயற்பாடுகள் அமைந்துள்ளன. எனவே, எமது ஊழியர்களின் தன்னிறைவு மற்றும் ஊக்கமான மனநிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

இதற்கமைய நாம் எமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பு செய்திருந்தோம். இது அவர்களுக்கு பெரிதும் நிவாரணமாக அமைந்திருக்கும்” என்றார்.

2010 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட IWW Steel கம்பனி, நாட்டின் கட்டிட நிர்மாணத்துறைக்கு பொருத்தமான பல்வேறு வகையான உருக்கு கம்பிகளை உற்பத்தி செய்கிறது.  கம்பனியின் தயாரிப்புகளில், RS QST RB 500 உருக்குக் கம்பி, சர்வதேச தரங்களுக்கமைய உற்பத்தி செய்யப்படுகிறது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் தரம் வாய்ந்த உலோகத்தண்டுகளைக் கொண்டு, நவீன தொழில்நுட்பம் மற்றும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி மேலதிக வலிமையைச் சேர்க்கும் வகையில் உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் மூலமாக 2015 இல் RS QST RB 500 உருக்குக் கம்பிகளுக்கு SLS 375:2009 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

கட்டிட நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பல உள்நாட்டு நிறுவனங்கள் RS QST RB 500 உருக்குக் கம்பிகளை பயன்படுத்தி வருகின்றன. இந்த கம்பிகள் மீது அந்நிறுவனங்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளன.

IWW Steel தயாரிப்புகளுக்கு மூலப்பொருட்கள் விநியோகத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர். தயாரிப்புகளுக்கு மேலதிக பெறுமதியை சேர்க்கும் வகையில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

IWW Steel தயாரிப்புகளின் விலை நிர்ணயங்களும் விசேடமானதாக அமைந்துள்ளன. சகல IWW Steel தயாரிப்புகளையும் சகாயமான விலையில் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.