தொழு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு அதிகரிப்பது அவசியமாகும் ;சுப்ரமணிய சர்மா குருக்கள்!

03 Sep, 2024 | 09:39 AM
image

தொழுநோய் என்பது ஒரு தொற்று நோய் இது எளிதில் சுவாசம் மூலம் பரவக்கூடியது. ஆனால் அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இந்த சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாக குணமடைய கூடியது. இலங்கையில் தொழு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு அதிகரிப்பது அவசியமாகும். என  வவுனியா இந்து குருக்கள் ஒன்றியத்தின் தலைவர் - சுப்ரமணிய சர்மா குருக்கள்  தெரிவித்துள்ளார். 

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தொழுநோய் முகாமைத்துவம், மற்றும் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாடு எனும் தொனிப்பொருளில் வவுனியா பிரதேச செயகலம், காவேரி கலா மன்றம் மற்றும் மாற்று மக்கள் சபை ஆகியன இணைந்து நடாத்திய மாநாட்டில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.  

இந்த விடயம்  தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,   

தொழு நோயின் முக்கிய அறிகுறிகளாக தோலின் மேற்பரப்பில் கட்டிகள் மற்றும் வெளிறிய நிறத்தில் தேமல் காணப்படும். அவை உணர்ச்சியற்றவையாக ரோமங்கள் அற்றவையாக காணப்படும்.

சில சந்தர்ப்பங்களில் நரம்புகள் மரத்துப் போகின்ற கை கால் உணர்ச்சியற்ற நிலை ஏற்படுகின்ற நிலையும் ஏற்படலாம் இவை அறிகுறிகளாக காணப்படும். 

இவ்வாறான அறிகுறிகள்  காணப்படுமாயின்  உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் இலங்கையில் இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன எனவே பயப்படாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யவும். 

நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படும் நிலையை தவிர்க்க அனைவரும் தொழுநோய் தொடர்பாக அறிந்து மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பது இன்றியமையாதது. தொழு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று நம் சமூகத்தை காப்போம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34