ஒவ்­வொ­ரு­வரும் கூறும் கருத்­துக்­களை கேட்­டு­ விலகிச் சென்­று­விட்டால் சீனா­வுடன் ஒப்­பந்தம் செய்­து துறை­மு­கத்­தினை விற்­பனை செய்­து­வி­டு­வார்கள். அவ்­வா­றின்றி நாட்டின் வளங்­களை பாது­காப்­பதே எமது அர­சாங்­கத்தின் நோக்கம். அதற்­காக மஹிந்த செய்த பாவத்தின் கட­னையும் நாம் செலுத்த வேண்­டி­யுள்­ளது என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அர­சாங்­கத்தை ஒற்­று­மை­யாக முன்­நகர்த்திச் செல்­கின்­றார்கள். விமர்­ச­னங்­களை கண்டு அஞ்சி விலகிச் செல்ல மாட்டோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம்  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது தன்­னு­டைய சகோ­த­ரரான அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க ரெஜி ரண­துங்­கவின் புதல்­வ­ராயின் துறை­மு­கத்தை விற்­பனை செய்­வ­தற்­கெ­தி­ராக நேர­டி­யாக பாதையில் இறங்கி எதிர்ப்­பினை வெளி­யி­டுவார் என்று  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிர­சன்ன ரண­துங்க வெளி­யிட்ட கருத்து தொடர்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய வினா­விற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அவர் என்­னு­டைய சகோ­தரர் என்­பது உண்மை. தற்­ச­மயம் அவர் பொது எதிர்­க்கட்சி என்­றொன்றில் அங்கம் வகிக்­கின்றார்.  இன்று துறை­மு­கங்கள் அமைச்சர் என்ற வகையில் நானும் என்­னு­டைய குழு­வி­னரும் முன்னர் ஏற்படுத்திய ஒப்­பந்­தத்தில் பாரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். நாடென்ற வகையில் துறை­மு­கத்தை பாது­காப்­ப­தற்கு நாம் என்றும் முன்­னிற்போம். இதனை எனது தந்­தையார் கண்­டி­ருந்தால் மிகவும் சந்­தோ­சப்­பட்­டி­ருப்பார்.

என்­னு­டைய தந்தை இந்­நாட்டு வளங்­களை பாது­காப்­பதில் அக்­கறை செலுத்­தி­யவர். இந்­நாட்டு வளங்­களை பாது­காப்­பதே என்­னு­டைய பிர­தான குறிக்­கோ­ளாகும். இன்று நான் அமைச்சர் என்ற வகையில் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீன நிறு­வ­னத்­திற்கு விற்­பனைச் செய்யும் திட்­டத்­தி­லி­ருந்து வில­கி­யி­ருந்தால் எமக்கு காட்­டிய முதல் ஒப்­பந்த பிர­தியே கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருக்கும். 

இந்த அர­சாங்­கத்தை நிறு­வி­யவன்  என்ற வகையில் எமக்கு அதி­க­ளவு இலாபம் கிட்டும் வகையில் ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டவே முயற்­சிக்­கின்றேன். நானும் துறை­முக அதி­கார சபையின் தலை­வர்இ உப தலைவர் உள்­ள­டங்­கிய அத்­தி­யட்­சகர் ஆகியோர் துறை­மு­கத்­தினை பாது­காப்­ப­தையே குறிக்­கோ­ளாக கொண்டு செயற்­ப­டு­கின்றோம்.

மேற்­படி  திட்­டத்தில் பெரு­ம­ளவு வெற்­றி­கண்­டுள்ளோம். தற்­கா­லத்தில் துறை­மு­கத்தில் பெரு­ம­ளவு மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. நாம் முதலில் கைச்­சாத்­தி­ட­வி­ருந்த ஒப்­பந்­தத்­திற்கும் எதிர்­கா­லத்தில் நாம் கைச்­சாத்­தி­ட­வுள்ள ஒப்­பந்­தத்­திற்கும் இடை­யி­லுள்ள வேறு­பாட்டை எதிர்­வரும் காலத்தில் நான் உங்­க­ளுக்கு காண்­பிப்பேன். 

அப்­பொ­ழுது இப்­படி பேசு­ப­வர்­க­ளிற்கு வெளியில் இறங்க இய­லாது. நாட்டில் நல்­ல­தொன்று நடக்­கையில்இ நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்­ப­்பதற்கு முற்­ப­டு­கையில் அர­சியல் இலா­ப­மீட்ட முற்­பட வேண்­டா­மென நான் கூறு­கின்றேன். நாம் நாட்டை நல்­வ­ழிப்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்றோம். 

ஜனா­தி­பதி என்னை வெளியே போகச் சொன்னால் நான் வெளியே செல்வேன். அவ்­வா­றின்றி ஒவ்­வொ­ருவரும் கூறு­வதைப் போன்று பதவி வில­கு­வ­தற்கு நான் ஒன்றும் கைப் பாவை­யல்ல. 

நான் இங்கு செய்­துள்­ள­வற்றை இவ்­வாறு பேசும் ஒரு­வ­ரேனும் செய்­ய­வில்லை. அவர்கள் இருந்­தி­ருந்தால் தற்­ச­மயம்  துறை­மு­கத்தை விற்­பனை செய்யும் ஒப்­பந்­தத்­தினை கைச்­சாத்­திட்­டி­ருப்­பார்கள். 

மஹிந்த செய்த பாவத்­தையே நாம் இன்று போக்­கு­கின்றோம். மஹிந்த சீன நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்டு  துறை­மு­கத்­தினை அவர்­க­ளுக்கு கொடுக்க முயற்­சித்தார். என்­னாலும் இவற்­றி­லி­ருந்து விலகி சீன நிறு­வ­னத்­துடன் கைச்­சாத்­திட்டு ஐம்­பது இலட்சம் அல்­லது எண்­பது இலட்­சத்தை எடுத்துக் கொண்டு வீட்­டுக்குச் சென்­றி­ருக்­கலாம். அதுவே பெரும்­பா­லா­ன­வர்­களின் எதிர்­பார்ப்­பாகும். 

கடந்த காலத்தில் அமைச்­சர்கள் இத­னையே செய்­தார்கள். அன்று அவர்கள் கைச்­சாத்­திட்ட ஒப்­பந்­தத்தின் பிர­தியின் விளை­வையே நாம் தற்­கா­லத்தில் எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.  நாம் இந்­நி­லையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். துறை­முக அதி­கார சபையை இலா­ப­மீட்டும் நிறு­வ­ன­மாக மாற்­றி­ய­மைத்­துள்ளோம். 

அதனால் இன்­னு­மொரு துறை­முக அதி­கார சபையை ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்க மாட்டோம். அதுவே எமது கொள்­கை­யாகும். இவ்­வ­னைத்து கார­ணி­க­ளையும் அமைச்­ச­ர­வைக்கு அறி­வித்­துள்ளோம். எம்­மு­டைய கோரிக்­கை­க­ளிற்கு ஜனா­தி­பதி தொடர்ச்­சி­யாக உத­வு­கின்றார். அமைச்­சர்கள் என்ற வகையில் அர­சாங்கம் தவ­றி­ழைக்கும் பொழுது அதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் அதி­காரம் எமக்­குள்­ளது. 

மஹிந்­தவின் காலத்தில் இவ்­வாறு பேசு­கின்ற எந்­த­வொரு அமைச்­ச­ரா­வது பேசு­வ­தற்கு இருந்­தார்­களா? இல்லை. பூனை குட்­டிகள் போன்று கொடுப்­பதை உண்­டு­விட்டு வீடு­க­ளிற்குச் சென்­றார்கள்.  இன்று எமக்கு நிலை­யான அர­சாங்­க­மொன்­றுள்­ளது. நாம் நாட்டை முன்­னேற்­று­கின்றோம்.  ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இந்த விட­யத்தில் பொறுப்­பு­டை­ய­வர்­க­ளாக உள்­ளார்கள்.

எனவே ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் நாட்டின் வளங்­களை விற்­பனை  செய்­வ­தற்கு நாம் இவ்­வ­ர­சாங்­கத்தை பொறுப்­பேற்­க­வில்லை. நாம் முத­லீட்­டா­ளர்­களை வர­வ­ழைத்து எமக்கு நன்மை பயக்கும் வகையில் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தையே செய்­கின்றோம்.

மஹிந்த ஒரு போதும் என்­னு­டைய தந்­தையை கவ­னிக்­க­வில்லை. என்­னு­டைய தந்தை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவே இறந்தார் என்­பது உங்­க­ளிற்கு நினை­வி­லி­ருக்கும். அவர் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ராவார். கம்­ப­ஹா­விற்கு சேவை­யாற்றும் பொருட்டே அவர் பாரா­ளு­மன்­றிற்கு வந்தார். 

அவ­ருக்கு அமைச்சு பதவி கிடைக்­க­வில்லை. இன்று அவற்றை பலர் மறந்­துள்­ளார்கள். ஏனெனில் அக்­கா­லத்தில் ஒரு சிலர் அமைச்சு பத­வி­களை ஏற்­றி­ருந்­தார்கள். இவற்­றுக்கு எதிர்ப்பு வெளி­யிட்­ட­மை­யி­னா­லேயே நான்  மஹிந்­த­வி­ட­மி­ருந்து முத­லா­வ­தாக வெளி­யே­றினேன். நான் ரெஜி ரண­துங்­கவின் மகன் என்­பதை என் அம்மா நன்­க­றிவார்.

என்­னு­டைய அம்மா யார் என்­பதை நாம் நன்­க­றிவோம். எங்­க­ளு­டைய குடும்­பத்தில் 6 சகோ­த­ரர்கள் உள்­ளார்கள். 6 சகோ­த­ரர்­களும் வெவ்­வே­றான முறையில் அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்றோம். கட்­சி­களை பகிர்ந்துக் கொண்டு நாம் அர­சி­யலில் ஈடு­ப­ட­வில்லை. நாட்டின் தேவையின் பொருட்டே நான் அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்றேன். இதில் எவ்­வித மாற்­றமும் ஏற்­ப­டாது. 

என்னால் இல­குவில் வீட்­டிற்குச் செல்ல முடியும்.  என்னை விமர்சிப்பவர்களின் தேவையாதெனில் என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டு துறைமுக ஒப்பந்தத்தினை கைசாத்திட்டு  அதன் ஒரு பகுதியை மஹிந்த ராஜபக் ஷ விற்கு வழங்குவதாகும். நான் அவர்களிடத்தில்  ஏமாற மாட்டேன். இச்செயற்பாட்டிற்கு நான் முழுமையாக எதிர்ப்பு வெளியிடுகின்றேன் என கூறி வீட்டிற்கு சென்ற ஒரு காலம் எனக்கும் இருந்தது.

இன்று நான் அவ்வாறு செய்தால் இவ்வனைத்து ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டு துறைமுகம் முழுமையாக விற்கப்பட்டிருக்கும். எனவே நாம்  மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நான் என்னுடைய போராட்டத்தை  கைவிடவில்லை. மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய இன்னும் பல காரணிகள் உள்ளன. அதன் பொருட்டு ஜனாதிபதி உதவுகிறார் என்றார்.