கதிர்­காமம், நாக­ஹ­வீ­திய யால வனப் பிர­தே­சத்­திற்கு அண்­மித்த பகு­தியில் மரம் ஒன்­றிலும் கொங்­கிரீட் கம்பம் ஒன்­றிலும் நீண்ட கால­மாக தாய் ஒருவரினால் கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்த இரு சிறு­வர்கள் பாதுகாப்பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள கப்­பு­கம சர­ண­திஸ்ஸ என்ற விகா­ரா­தி­பதி ஒரு­வ­ருக்கு  கிடைத்த தக­வலின் அடிப்­ப­டையில், கதிர்­காமம் பொலி­ஸா­ருடன் இணைந்து அப்­ப­கு­திக்கு சென்று குறித்த இரண்டு சிறு­வர்­களும் மீட்­க­ப்பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

09 வய­து­டைய சிறுவன் கொங்­கிரீட் கம்­பத்­திலும், 17 வய­து­டைய சிறுமி மரம் ஒன்­றிலும் கட்­டப்­பட்­டி­ருந்­த­தாக தெரிய வந்­துள்­ளது.

இந்த சிறு­வர்­களின் தந்தை உயி­ரி­ழந்­துள்ள நிலையில், தாய் அங்­க­வீ­ன­ம­டைந்த பிள்­ளை­யுடன் கதிர்­காமம் வழி­பாட்டு பிர­தே­சத்தில் பிச்சை எடுத்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

கடந்த பல ஆண்­டு­க­ளாக இந்த இரு சிறு­வர்­க­ளையும் இவ்­வாறு கட்டி வைத்து விட்டு, மற்ற பிள்­ளை­யுடன் தாய் பிச்சை எடுத்து வரு­வ­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தாய் மற்றும் மூன்று பிள்ளைகளும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.