யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கொடியேற்றம்

02 Sep, 2024 | 06:56 PM
image

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற உற்சவம் ஆலய பிரதம சிவாச்சாரியார்  கண்ணன் குருக்கள் தலைமையில் இன்று (02) காலை 9.15 மணியளவில் நடைபெற்றது.

வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும், ஆறாம் திருவிழா வரை காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேக  பூசைகள் நடைபெற்று, 7ஆம் திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி வல்லிபுர ஆழ்வாரின் வெளிவீதி உலா நடைபெறும்.

தொடர்ந்து 8ஆம் திருவிழாவான மறுநாள் 09ஆம் திகதி குருக்கட்டு பிள்ளையார் திருவிழாவும், 9ஆம் திருவிழாவான 10ஆம் திகதி வெண்ணெய் திருவிழாவும், 10ஆம் திருவிழாவான 11ஆம் திகதி  துகில் திருவிழாவும், 11ஆம் திருவிழாவான 12ஆம் திகதி பாம்புத் திருவிழாவும், 12ஆம் திருவிழாவான 13ஆம் திகதி கம்சவத திருவிழாவும், 13ஆம் திருவிழாவான 14ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், 14ஆம் திருவிழாவான 15ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 15ஆம் திருவிழாவான 16ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 16ஆம் திருவிழாவான சமுத்திர திருவிழா 17ஆம் திகதி நடைபெறும். 

அதனை தொடர்ந்து, மறுநாள் 18ஆம் திகதி 17ஆம் திருவிழாவான கேணித் தீர்த்தம் நடைபெறும்.

திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் சைவ சமய பண்பாட்டின் முறைப்படி வருகை தரவேண்டும் என ஆலய நிர்வாகம் தெரிவிக்கிறது.

மேலும், சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டுள்ளதுடன், போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகள் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21