கடந்த பிறவியில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினை செயல்களுக்கான பிரதி பலனாக தான் இந்த பிறவியில் மனிதனாக பிறந்திருக்கிறோம். அத்துடன் நாம் எதற்காக எந்த தோஷத்துடன் எந்த நோக்கத்திற்காக பிறந்திருக்கிறோம் என்பதை எம்முடைய ஜாதக கட்டங்கள் தெளிவாக எடுத்துரைக்கும்.
அதிலும் குறிப்பாக ஒவ்வொருவருடைய ஜாதக கட்டங்களிலும் ராகு - கேது எனும் இரண்டு நிழல் கிரகங்கள், எந்த இடத்தில் இடம் பிடித்திருக்கிறதோ அதை பொறுத்து தான் உங்களுக்கு இந்த பிறவியில் சுப பலன்களும், அசுப பலன்களும் கிடைக்கும்.
இந்த நிலையில் உங்களுடைய ஜாதக கட்டத்தில் ராகு பகவான் எந்த ராசியில் அதாவது எந்த கட்டத்தில் இடம் பிடித்திருக்கிறாரோ அதற்கு ஏற்ற வகையில் ராகுவின் ஆசி கிடைப்பதற்கும், ராகுவின் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கும், எம்முடைய முன்னோர்கள் எளிய பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
மேசம் & சிம்மம் & தனுசு ஆகிய மூன்று ராசி கட்டத்தில் ராகு பகவான் இருந்தால் அவர்களுக்கு தோஷமாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நாளாந்தம் ராகு கால வேளையில் துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபட வேண்டும். கூடுதல் பலன் கிடைக்க வேண்டும் என்றால் எலுமிச்சை பழ தோலில் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.
ரிஷபம் -கன்னி - மகரம் ஆகிய மூன்று ராசி கட்டத்தில் ராகு பகவான் இருந்தால் அது அவர்களுக்கு தோசமாக இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய ராகு - கேது லிங்கங்களை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்த வேண்டும்.
இதற்காக உங்களது வீட்டிற்கு அருகே இருக்கும் சிறிய கோவில்களில் உதாரணமாக அரச மரத்தடி விநாயகர் கோயிலுக்கு அருகே இருக்கும் இடத்தில் இத்தகைய ராகு -கேது உருவம் பொறித்த சிலையை பிரதிஷ்டை செய்ய இயலும். அதற்கு உரிய அனுமதியை பெற்று தங்களது பெயரில் பிரதிஷ்டையை மேற்கொண்டால் ராகுவால் சுப பலன் கிடைக்கும்.
இந்தத் தருணத்தில் எம்மில் பலருக்கும் அந்த சிலையை கருங்கல்லில் வடிக்க வேண்டுமா? அல்லது ராகு- கேது என இரண்டு நாகத்தையும் இணைத்து உருவாக்க வேண்டுமா? அல்லது ராகுவை மட்டுமே செதுக்க வேண்டுமா? அல்லது ஐந்து தலை கொண்ட நாகத்தை வடிவமைக்க வேண்டுமா? அல்லது அந்த சிலையில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் உருவத்தை இடம்பெறச் செய்ய வேண்டுமா? என பல சந்தேகங்கள் எழக்கூடும்.
இவற்றில் எதனை உருவாக்கி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக அவதானிக்க உங்களுடைய அனுபவம் மிக்க ஜோதிட நிபுணர்களை கலந்து ஆலோசித்து அவர் தரும் வழிகாட்டலை உறுதியாக பின்பற்ற வேண்டும். அவர் உங்களது ஜாதகத்தில் ராகு இருக்கும் ராசி கட்டத்தையும், அதன் வலிமையையும், தோஷத்தையும், சுப பலன்களையும், என பல விடயங்களை கணக்கிட்டு உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்.
மிதுனம்- துலாம் -கும்பம் ஆகிய மூன்று ராசிகளில் ராகு இடம் பிடித்திருந்தால் அவர்கள் ராகு தோஷத்தால் ஆட்பட்டிருந்தால் ஆலய இறை வழிபாட்டு பரிகாரத்தின் மூலம் மூலம் மூலம் தான் சுப பலன்களை பெற முடியும். இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள காளஹஸ்தி எனும் புனித தலத்திற்கு யாத்திரை செய்து, அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும்.
இது தொடர்பான யாத்திரை விபரங்களை இணையதளத்தில் பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அங்கு இறை வழிபாட்டிற்கான பரிகார முறைகளை இறைத்தொண்டு செய்யும் ஊழியர்கள் இடத்தில் கேட்டு தெரிந்து, அதனை மேற்கொண்டால் சுப பலன்கள் கிடைக்கும். மேலும் இந்த ஆலயத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேளையில் நடைபெறும் பரிகார பூஜையில் பங்கு பற்றி வழிபட்டாலும் தோஷம் நீங்கி, சுப பலன் கிட்டும்.
கடகம் -விருச்சிகம்- மீனம் ஆகிய ராசி கட்டத்தில் ராகு இடம் பிடித்திருந்தால் அது தோஷமாக இருந்தால் உங்களது வீட்டிற்கு அருகே அரச மரத்தடி விநாயகர் அல்லது அரச மரமும், வேம்பு மரமும் இணைந்திருக்கும் மரத்திற்கு கீழ் வாசம் செய்து அருள் பாலிக்கும் விநாயகர் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
சில இடங்களில் நீர் நிலைகளான குளம்- ஏரி- ஆறு -போன்ற இடங்களின் கரைகளில் இது போன்ற அரச மரமும், வேம்பு மரமும் இணைந்தோ அல்லது அரச மரத்தின் அடியிலோ விநாயகர் அருள்பாலிப்பார்.
இவர்கள் இந்த விநாயகரை பாலபிஷேகம் செய்து வணங்கலாம். பொருளாதார வசதி இல்லை என்றால் அந்த நீர் நிலையில் இருக்கும் நீரை குடங்களில் பிடித்து காலை வேலைகளில் விநாயகருக்கு அபிஷேகம் செய்தாலும் சுப பலன்கள் கிடைக்கும். பால் அபிஷேகம் அல்லது நீரால் அபிஷேகம் செய்யும்போது விநாயகருக்கு மட்டும் மேற்கொள்ளாமல் அதன் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அனைத்து நாகலிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்தால் சுப பலன்கள் விரைவாக கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM