குறைந்த வருமானம் பெறுவோருக்கு மானிய வட்டியில் வீட்டுக் கடன் : மலையக மக்களுக்கு தோட்டக் கிராமங்களுடன் காணி உரிமை - ஜனாதிபதி

02 Sep, 2024 | 05:56 PM
image

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அரச சொத்துக்களை உள்ளடக்கி புதிய முதலீட்டு நிறுவனமொன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் அதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதன் ஊடாக சொத்துக்களை உருவாக்கும் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும் முறையான ஓய்வூதிய திட்டமிடல் முறையை உருவாக்கவும் முடியும் எனவும்  ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சனச அமைப்பின் ஊடாக முதியோர்களுக்கான புதிய ஓய்வூதியக் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு  இன்று (02) முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. 

இந்த  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அடையாள ரீதியில் முதியோர் காப்புறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ஸ்திரமற்ற நிலையில் இருந்த வேளையில் தான் நாட்டைப் பொறுப்பேற்று கடினமான முடிவுகளை எடுத்து நாட்டை மீட்டதாக கூறிய ஜனாதிபதி, மக்கள் பொறுமையாக செயற்பட்டிருக்காவிட்டால் இன்று பங்களாதேஷைப் போன்று எமது நாடும் மாறியிருக்கும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

1977இல் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை திறந்துவிட்டது. அதன்படி, புதிய நிறுவனங்கள் மற்றும் புதிய வணிகங்களை உருவாக்க ஒவ்வொரு குழுவும் முன்வந்தன. அன்றைய தினம் சனச இயக்கத்தை ஆரம்பிக்க பி.ஏ.கிரிவந்தெனிய முன்வந்தார். அதன்படி, இந்தத் திட்டத்தை சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் உற்பத்தி மற்றும் விநியோகம் பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை 1962இல் டட்லி சேனாநாயக்க மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன ஆகியோரால் கொண்டு வரப்பட்டன. உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதற்கான முன்மொழிவாக இது அரசியலமைப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சனச இயக்கங்கள் போன்ற அமைப்புகள் ஊக்குவிக்கப்பட்டன. இது இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

20ஆம் நூற்றாண்டை விட 21ஆம் நூற்றாண்டில் மாற்றம் ஏற்பட்டது. சிறு தொழில்கள் உருவாகி, பொருளாதாரம் விரிவடைந்தது. முச்சக்கரவண்டித் தொழில் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய சிறு வணிகம் வேகமாக முன்னேறியது. ஆனால், 2022இல் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாடு ஸ்திரமற்ற நிலையில் இருந்த நேரத்தில் நான் நாட்டை பொறுப்பேற்றேன். அன்று மக்கள் பொறுமை காக்கவில்லை என்றால் இன்று இந்த நாட்டில் பெரும் அராஜக நிலை உருவாகியிருக்கும்.

மக்கள் வீதியில் இருந்துகொண்டு நாட்டை நிர்வகிக்க முயன்றால் இன்று பங்களாதேஷுக்கு நேர்ந்த கதி இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் கடினமான மற்றும் பிரபலமற்ற முடிவுகளை எடுக்க நேரிட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

வாகனம், வீடு, நவீன மின்சாதனங்கள் வாங்குவது மக்களின் கனவாக இருந்தது. நாம் கடினமான காலத்தை கடந்துவிட்டோம். பொருளாதாரம் தற்போது ஸ்தீர நிலையை அடைந்துள்ளதால், மக்களின் கொள்வனவு செய்யும்  சக்தியும் அதிகரித்துள்ளது.

மக்களுக்கு  காணி உரித்து வழங்கும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்நாட்டு மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, இருபது இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன.

கொழும்பு நகர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் வீட்டின் உரிமைகளை  வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்தோம். மலையக மக்களுக்கான தோட்ட கிராமங்களை உருவாக்கி ஒரு குடும்பத்திற்கு ஏழு பேர்சஸ் காணியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொறிமுறையின்படி மக்களுக்கு "உரிமைகள்" வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலகு வட்டியில் வீட்டுக்கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஊழியர் சேம நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றின் நிதி, பிணைமுறிப் பத்திரங்களை வாங்க பயன்படுத்தப்பட்டது. இப்போது நாம் முன்னெடுக்கும் செயற்றிட்டத்தின்படி அரச செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

அரச வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருமானம் அதிகரிக்கும் போது, பிணைமுறிப் பத்திரங்களை வாங்க ஊழியர் சேமலாப நிதியத்தின் பணம் தேவையில்லை. அந்த நிதியை முதலீட்டுக்கு பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது. இது குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் அரசாங்க சொத்துக்களிலிருந்து முதலீட்டு நிறுவனம் ஒன்றை  (National Wealth Fund) நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது. நோர்வே, கட்டார், சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அரச வருமானத்தின் மூலம்  கிடைக்கும் இலாபத்தை நலன்புரிப் பணிகளுக்காக பயன்படுத்த இவ்வாறானதொரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. அதன் மூலம் மக்களின் "உரிமை" பாதுகாக்கப்படும்.  

இவ்வாறானதொரு சமூக முதலீட்டுத் திட்டத்தை இந்த சனச இயக்கமும் செய்து வருகின்றது என்பதை கூற வேண்டும். இந்த வகையான சமூக முதலீட்டு முறை பல்வேறு சேவை கூட்டுறவு சங்கங்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு புதிய சட்டங்கள் கொண்டுவருவது அவசியமாக உள்ளதுடன், டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் ஆராய்ந்து அந்த சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் முதலீடுகள் அல்லது ஓய்வூதிய திட்டங்களையும் முன்னெடுக்கலாம்.

புதிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் பிரவேசிக்கும் இளம் தொழில்முனைவோருக்கு ஒரு தனியான சனச இயக்கத்தை உருவாக்க வேண்டும்.  விவசாயத்துறையையும், மீன்பிடித்துறையையும் நவீனமயமாக்குவதன் மூலம் பொருளாதாரத்தை திறம்பட மேம்படுத்த முடியும். அதற்கெல்லாம் முன்மாதிரியாக சனச கட்டமைப்பு இருந்தது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். சனச சங்கங்கள் மழைக்குப் பிடிக்கும் குடையைப்  போன்றது. தலைக்கு மேல் உள்ள கூரை போன்றது. இதன் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க எதிர்பார்க்கிறேன். 

சனச இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி பி.ஏ.கிரிவந்தெனிய கூறுகையில்,

சனச இயக்கம் 1977இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் அப்போது நிலவிய புதிய பொருளாதார அலையை மக்கள் எதிர்கொள்ளும் வகையில் செயற்பட்டோம். சிறு விவசாயியையும் சிறு உற்பத்தியாளரையும் முன்னோக்கி கொண்டு செல்லும் அமைப்பை சனச இயக்கம் உருவாக்கியது. அப்போது சனச இயக்கத்தில் சுமார் 84,000 பேர் இருந்தனர். இன்று இலங்கையின் சனத்தொகையில் சுமார் 17% சனச உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது சனச பில்லியன்கணக்கான வருமானம் ஈட்டும் வணிகமாக மாறியுள்ளது.

மேலும், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக கடன் காப்புறுதி முறையை அறிமுகப்படுத்தினோம். காப்புறுதி நிறுவனமும் தொடங்கினோம். தற்போது இந்நாட்டில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

மேலும் அவர்களுக்கான புதிய காப்புறுதி முறையை அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளோம். இந்த திட்டம் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது என்பதைக் கூற  வேண்டும். அதனுடன் இணைக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இந்த முதியோர் காப்புறுதி தவணைத் தொகை 10 ரூபாய் போன்ற சிறிய தொகையில் ஆரம்பிக்கிறது என்பதைக் கூற வேண்டும். இந்த காப்புறுதி முறை வலுவாக முன்னேறும் என எதிர்பார்க்கிறோம்.

இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, சனச ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஐவன் நிகலஸ் மற்றும் சனச இயக்கத்தின் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை...

2024-10-13 11:03:13
news-image

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு...

2024-10-13 11:23:53
news-image

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் -...

2024-10-13 11:04:44
news-image

அநுர - ரணில் இடையே வித்தியாசமில்லை...

2024-10-13 10:30:26
news-image

196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி...

2024-10-13 10:13:12
news-image

வடமராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு...

2024-10-13 10:50:56