இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் திடீரென்று மூக்கடைப்பு, தலைவலி, உடல் வலி, சோர்வு, சளியுடன் கூடிய இருமல்.. ஆகிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய சுவாச குழாயின் மேல் பகுதியில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என பொருள்.
இதற்கு மக்கள் சுயமாக சிகிச்சையை மேற்கொள்ளாமல், அருகில் இருக்கும் வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மூக்கு, தொண்டை, குரல்வளை ஆகிய பகுதிகள் மேல் சுவாசக் குழாயில் உறுப்புகளாகும். இவற்றில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று அல்லது வைரஸ் கிருமியினால் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் சைனசைடீஸ், ரைனட்டிஸ், லாரிஞ்சைடிஸ், ஃபாரிஞ்சைடீஸ் என வரையறுப்பார்கள்.
தலைவலி, மூக்கு ஒழுகுதல், காய்ச்சல், சோர்வு, சளியுடன் கூடிய இருமல், தும்மல், தொண்டை வலி, மார்பக வலி, உறக்கமின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.
சளி காய்ச்சல், ஒவ்வாமை, பாக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு வைத்திய நிபுணர்கள் ராபிட்ஆண்டிஜன் பரிசோதனை, ஹெரெரோஃபில் பரிசோதனை, ஐ ஜி எம் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
இதன் முடிவுகளின் அடிப்படையில் பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
வைத்தியர் ஸ்ரீ தேவி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM