(எம்.ஆர்.எம்.வசீம்)
சட்டத்தின் ஆட்சி இல்லாத எந்த நாடும் முன்னேறுவதில்லை. சிங்கப்பூர் முன்னேற்றமடைய பிரதான காரணம் அங்கு சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட்டு வருவதாகும். பாராளுமன்றத்துக்கு மோசடி காரர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கு தேர்தல் முறைமையே காரணமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களின் கொள்கை பிரகடனத்தை மக்களுக்கு தெரிவிப்பதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் அவர்களுக்கு வழங்கி இருக்கும் விசேட சந்தர்ப்பத்தில் திங்கட்கிழமை (02) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தாெடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய விகிதாசார தேர்தல் முறை மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதாக 1994ஆம் ஆண்டு முதல் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதிகள் வாக்குறுதி அளித்து வந்தனர். ஆனால் அதனை இதுவரை யாருக்கும் செய்ய முடியவில்லை. இந்த தேர்தலிலும் ஒருசில ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.
அதேபோன்று விகிதாசார தேர்தல் முறையில் இருக்கும் மோசடி காரணமாகவே மோசடி காரர்கள் அதிகமாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுகின்றனர். அதனால் இந்த தேர்தல் முறையில் மாற்றம் செய்வதன் மூலமே மோசடிகளை கட்டுப்படுத்த முடியும்.
இருந்தபோது தற்போது நாங்கள் தேர்தல் செலவு கண்காணிப்பு சட்டத்தை பாராளுமன்ற்ததில் அனுமதித்துக்கொண்டுளோம். இந்த சட்டம் ஜனாதிபதி தேர்தலில் அமுலில் உள்ளது. அதனால் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஓரளவு நியாயம் கிடைக்கிறது.
வேட்பாளர்கள் தேர்தலுக்காக தங்களுக்கு முடியுமான வகையில் செலவிட முடியாது. அதற்கு வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று வேட்பாளர்களின் சொத்து விபரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த விடயங்களில் வேட்பாளர்கள் பொய்யான தகவல் வழங்கி இருந்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் இருக்கின்றன.
அதனால் வேட்டபாளர் ஒருவர் கண்மூடித்தனமாக செலவழித்து, அதன் வருமான முறைகளை தெரிவிக்க தவறினால் அல்லது பொய் தகவல்களை வழங்கினால், தேர்தலுக்கு பின்னர் குறித்த வேட்பாளர் வெற்றிபெற்றால், அவரின் பதவ இல்லாமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் எந்தவொரு நாடும் பாரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும் அந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுமாக இருந்தால் அந்த நாடு முன்னேற்றமடையும். சிங்கப்பூர் பாரிய வளர்ச்சியடைந்த நாடாக இருக்கவில்லை. ஆனால் அங்கு சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட்டு வருவதால், அந்த நாடு முன்னேற்றமடைந்துள்ளது. சாதாரண மக்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
அதேபோன்று எமது நாட்டில் பரீட்சை முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். வாய்ப்பாம் செய்து பரீட்சடி எழுதும் முறைே இன்றும் இருக்கிறது. இந்த முறை தற்போது காலாவதியாகியுள்ளது.பிரித்தானியாவே இந்த முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால் அங்கு இந்த முறை இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
மேலும் எந்த நாட்டுடனும் கொள்கை அடிப்படையிலே கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ள வேண்டும். அதனை மீறி செயற்பட்டால், நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என யாருக்கும் தெரிவிக்க முடியாது. நாங்கள் எப்போதும் அணிசேரா கொள்கையுடன் செயற்படுவதன் மூலமே எமது இறைமையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM