தொடர்ந்து கதாபாத்திர தோற்ற புகைப்படங்களை வெளியிடும் 'கூலி' படக் குழு

Published By: Digital Desk 7

02 Sep, 2024 | 05:55 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் உபேந்திரா ஆகியோரின் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் வசூல் ரீதியாக புதிய சாதனைகளை படைத்த நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாகிர், மகேந்திரன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் கதாபாத்திரத்தின் பெயரும், அவர்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் தோற்ற புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் உபேந்திரா ஆகியோரின் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த படத்தில் சத்யராஜ் ராஜசேகர் எனும் கதாபாத்திரத்திலும், நடிகர் உபேந்திரா கலீஷா எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இதில் உபேந்திராவின் கையில் வித்தியாசமான ஆயுதமும் , சத்யராஜின் கையில் மின்சாதன கருவியும் இடம் பிடித்திருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சுப்பர் ஸ்டாரின் படத்தில் புரட்சி தமிழன் சத்யராஜ் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவர் முக்கியமான மற்றும் சிறப்பு தோற்றத்தில் தான் நடிக்கிறார் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்