தளபதி விஜய் நடிப்பில் தயாராகி எதிர்வரும் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மட்ட..' எனும் நான்காவது பாடல் வெளியான ஒரே நாளில் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' எனும் திரைப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடித்து பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள், கல்பாத்தி எஸ். அகோரம் - கல்பாத்தி எஸ். கணேஷ் - கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாமலேயே படம் வெளியாகிறது. இதனால் விஜயின் ரசிகர்கள் தங்களது தலைவரின் குட்டி கதையை தவற விட்டுட்டோமே..! என்ற வருத்தத்தில் தவிக்கிறார்கள்.
இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற 'மட்ட..' எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் பின்னணி பாடகர்கள் செண்பக ராஜ்- வேலு -ஷாம் - நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசையுடன் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் விஜய் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவரது ரசிகர்களிடத்தில் இந்த பாடல் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM