டெங்கு நோயால் பாதிக்­கப்­பட்­­வர்­களை பரா­மரிப்­­தற்­கென நாட்­டி­லுள்ள அனைத்து வைத்­தி­­சா­லை­­ளிலும் தனி­யான வார்ட் வசதிகள் உரு­வாக்­கப்­படும் என சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

குறித்த தீர்­மானம் தொடர்பில் பல அமைச்­சுக்­களின் பிர­தா­னி­­ளுடன் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­டுள்­­தா­கவும் வைத்­தி­­சா­லையில் டெங்கு நோயா­ளர்­­ளு­க்கான தனி­யான பிரிவு அவ­சி­­மாக உள்­­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

தற்­போது மேல் மாகா­ணத்தில்  டெங்கு நோயா­ளர்­­ளுக்கு சிகிச்கை அளிப்­­தற்கு அங்­கொடை மற்றும் நீர்­கொ­ழும்பு தொற்று நோய் தடுப்பு வைத்­தி­­சா­லை­­ளுக்கு அனுப்பப்­­டு­கின்­றனர். ஆனால் நோயா­ளர்கள் இருக்கும் பகு­தி­யி­லேயே டெங்கு நோயா­ளர்­களும் சிகிச்சை பெறு­வதால் பாரிய பிரச்­சி­னைகள் தோன்­றி­யுள்­ளன.

தற்­போது கட்­டு­மான பகு­தி­களில் டெங்கு நுளம்பு பரவும்  சூழலை வைத்­தி­ருப்­பார்­­ளாயின் குறித்த கட்­­டத்­திற்­கான அனு­மதிப் பத்­தி­ரத்­தினை ரத்துச் செய்­­தற்கும் தீர்­மா­னித்­துள்ளோம். மேலும் பாட­சாலை விடு­முறை கால­மா­வதால் பாட­சா­லைகள் தொடங்கும் முன்னர் அனைத்து பாட­சா­லை­­ளி­னதும் சுற்றுச்சூழல்­­ளிலும் டெங்கு நுளம்பு பர­வா­­வாறு பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது குறித்து  பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.