மாத்தளை, நாவுல, ரஜவெல கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
சமிந்த பண்டார என்ற 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது இவர்கள் மூவரையும் காட்டு யானை ஒன்று துரத்திச் சென்றுள்ளது.
இதன்போது, ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ள நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
தமது கிராமத்திற்கு அருகில் யானைகளுக்காக வேலி கட்டப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவற்றில் மின்சாரம் இல்லை எனவும் ரஜவெல கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் காட்டு யானைகள் தமது கிராமத்திற்கு வருவதாகவும் இது தொடர்பில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM