அவதானம் : குப்பைமேடு எந்நேரத்திலும் வெடிக்கலாம், நெருப்பு பற்றும்  வாய்ப்பு அதிகம் : பெக்கோ, சிகரட் பாவிப்பதை தடுக்கவும் : நேரில் சென்று ஆராய்ந்த ஜப்பான் குழு தகவல்

Published By: MD.Lucias

21 Apr, 2017 | 08:12 PM
image

(ந.ஜெகதீஸ்)

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மெதேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. எனவே அதன் தாக்கத்தினால் எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மீதொட்டமுல்லை குப்பை மேட்டினை ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்தது.

மேலும் மீதொட்டமுல்ல பகுதியில் சிறிய அளவிலேனும் நெருப்பு பற்றக்கூடிய எந்த வொரு பொருளையும் பாவிப்பதானது மிக அவதானமானது எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் ஏற்பட்ட அனர்த்தம் குறித்து ஆராய்வதற்காக ஜப்பானிலிருந்து வருகைத்தந்த 13 பேர் அடங்கிய விசேட நிபுணர் குழு இன்றையதினம் மீதொட்டமுல்லையில் ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னரே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஜப்பானில் இருந்து வருகைத்தந்திருந்த குறித்த விசேட குழுவின் அனர்த்த முகாமைத்துவத்துக்கான விசேட நிபுணர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவிக்கையில்,

மீதொட்ட முல்லை குப்பை மேடு சரிவு ஏற்படுவதற்கான அடிப்படை காரணிகள் குறித்த தரவுகள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இவ்வனர்த்தம் இடம் பெற்றதற்கான காரணத்தினை தற்போது சேகரிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் சகல துறைகள் தொடர்பாகவும் எமது குழுவினரால் ஆய்வு செய்யப்படவுள்ளது. குறித்த தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இவ்விடயம் தொடர்பிலான காரணத்தினை கண்டறிய முடியும். இந்நிலையில் தற்போதைய நிலையில் இரசாயனக்கழிவுகள் மற்றும் மெதேன் வாயு போன்றவற்றை தவிர்ந்த ஏனைய காரணிகள் சீராக இருப்பதனால் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றார்.

வெடிவிபத்து ஏற்படும் அபாயம்

தற்போது அனர்த்தம் இடம்பெற்ற குறித்த பிரதேசத்தினை ஆய்வு செய்ததன் அடிப்படையில் குப்பை மேட்டினது கீழ் பாகத்தினது இடது முனையில் ஒரு பகுதியிலிருந்து நீர் வெளியேறி வருகின்றது. குறித்த நீரை கால்வாயின் ஊடாக முறையாக வெளியேற்ற வேண்டிய தேவையுள்ளது. 

அத்துடன் அதிகளவிலான மெதேன் வாயுவின் தாக்கம் அந்த பகுதிகளில் காணப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் மெதேன் வாயுவின் அளவானது 1.5 ஆக சராசரியாக காணப்பட வேண்டும். எனினும் தற்போது பெறப்பட்டுள்ள ஆய்வின் தரவின் அடிப்படையில் இப்பிரதேசத்தில் மெதேன் வாயுவின் அளவானது 16க்கும் மேற்பட்டளவில் கானப்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே மக்கள் குடியிருப்புக்கள் கானப்பட்ட பிரதேசம் என்பதால் அப்பகுதிகளில் மலசலகூடக்கழிவுகளும் கானப்படுகின்றமையினால் அவற்றில் இருந்து வெளியேறும் மெதேன் வாயுவின் அளவும் சேர்ந்து உச்சபெறுமானத்தைக்காட்டுகின்றது. 

ஆகவே குறித்த பகுதிகளில் எந்நேரத்திலும் தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளதுடன் வெடிவிபத்துக்களும் ஏற்படலாம். இதனால் இப்பகுதிகளில் அகல்வு பணிகளில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினர் அவதானமான செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார். 

அகழ்வு பணிகளில் ஈடுபடும் போது பெக்கோ இயந்திரங்கள் வெளியிடும் வெப்பநிலை மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் தொடர்பிலும் அவதானமாக செயற்பட வேண்டும். அத்துடன் குறித்த பிரதேசங்களில் கலந்துள்ள இரசாயணக்கழிவுகளை அகற்றும் வரையில் சிகரட் பாவணையும் இப்பிரதேசங்களில் தடைசெய்யப்படுதல் வேண்டும் எனவும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஜப்பானிய விசேட குழுவினரால் பணிப்புறைவிடுக்கப்பட்டுள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு...

2023-10-03 19:23:40
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15