யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. DNA அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் சந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் 10 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதன்போது, இந்தக் குற்றத்தை தாம் செய்யவில்லையெனவும், தம்மை பழிவாங்கும் முயற்சியில் பொலிஸார் வீண்பழி சுமத்தியுள்ளதாகவும் சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.