(இராஜதுரை ஹஷான்)
தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம். தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு பொய்யுரைக்க போவதில்லை. நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்கமாட்டோம். தேசிய விவசாயத்தை மேம்படுத்த நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை முறையாக செயற்படுத்துவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹபரதுவ பகுதியில் சனிக்கிழமை (30) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தெற்கு மக்கள் என்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன் உள்ளார்கள். நாட்டுக்காக சிறந்த சிறந்த தீர்மானம் எடுப்பார்கள். வரபிரசாதங்களுக்காக தமது கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஒருசில அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள் மக்கள் அவர்கள் பக்கம் என்று, தம்மால் தான் மக்கள் இருக்கிறார்கள் என்று கருதுகிறார்கள்.
மக்களால் தான் அரசியல்வாதிகள் உள்ளார்கள் என்பதை பெரும்பாலான அரசியல்வாதிகள் மறந்து விட்டார்கள். மக்கள் வழங்கிய ஆணை மற்றும் கொள்கைளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு. மக்களின் அபிமானத்தை நாங்கள் பாதுகாப்போம்.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை எமக்கு உண்டு. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் வீதி உட்கட்டமைப்பு, விவசாயத்துறை மற்றும் கடற்றொழில் துறை அபிவிருத்தி செய்யப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட சிறந்த அபிவிருத்தி திட்டங்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் செயற்படுத்துவேன்.
தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம். தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு பொய்யுரைக்க போவதில்லை. நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்கமாட்டோம். தேசிய விவசாயத்தை மேம்படுத்த நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை முறையாக செயற்படுத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM