(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) நிறைவு பெற்ற 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் 190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது.
ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் குவித்த சதங்கள், கஸ் அட்கின்சனின் அற்புதமான சகலதுறை ஆட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
மிகவும் கடினமான 483 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதலாவது டெஸ்டில் போன்றே இந்த டெஸ்டிலும் நான்கு நாட்களுக்குள் இலங்கை தோல்வி அடைந்தது.
போட்டியின் 4ஆம் நாள் காலை வெற்றிக்கு மேலும் 430 ஓட்டங்கள் தெவைப்பட்ட நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களிலிருந்து இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 41 பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி திமுத் கருணாரட்னவுடன் 4ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மொத்த எண்ணிக்கை 115 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன கவனக் குறைவான அடி தெரிவினால் ஆட்டம் இழந்தார்.
அவர் 129 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து மத்திய வரிசையில் ஏஞ்சலோ மெத்யூஸ் (36), தினேஷ் சந்திமால் (58), தனஞ்சய டி சில்வா (50), மிலன் ரத்நாயக்க (43) ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடியபோதிலும் அவர்களால் இலங்கையின் தோல்வியைத் தடுக்க முடியாமல் போனது.
எண்ணிக்கை சுருக்கம்
இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 427 (ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118, பென் டக்கட் 40, அசித்த பெர்னாண்டோ 102 - 5 விக்.,)
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (கமிந்து மெண்டிஸ் 74, தினேஷ் சந்திமால் 23, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெத்யூ பொட்ஸ் 19 - 2 விக்., கிறிஸ் வோக்ஸ் 21 - 2 விக்.)
இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 251 (ஜோ ரூட் 103, ஹெரி புறூக் 37, ஜெமி ஸ்மித் 26, பென் டக்கட் 24, அசித்த பெர்னாண்டோ 52 - 3 விக்., லஹிரு குமார 53 - 3 விக்., மிலன் ரத்நாயக்க 38 - 2 விக்.)
இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 292 (தினேஷ் சந்திமால் 58, திமுத் கருணாரட்ன 55, தனஞ்சய டி சில்வா 50, மிலன் ரத்நாயக்க 43, ஏஞ்சலோ மெத்யூஸ் 36, கஸ் அட்கின்சன் 62 - 5 விக்., கிறிஸ் வோக்ஸ் 46 - 2 விக்., ஒல்லி ஸ்டோன் 56 - 2 விக்.)
ஆட்டநாயகன்: கஸ் அட்கின்சன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM