(நெவில் அன்தனி)
நியூயோர்க் சிட்டியில் நடைபெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு வருடங்கள் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் முறையே சம்பியன்களான காலோஸ் அல்காரெஸ் மற்றும் நோவாக் ஜோக்கோவிச் ஆகிய இருவரும் இந்த வருடம் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுகளில் அதிர்ச்சி தோல்விகளைத் தழுவி நொக் அவுட் செய்யப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2ஆம் சுற்றுப் போட்டியில் நிரல்படுத்தலில் இடம்பெறாத நெதர்லாந்து வீரர் பொட்டிக் வென் டி ஸாண்ட்ஸ்கல்பிடம் 3 நேர் செட்களில் 2023 சம்பியன் காலோஸ் அல்காரெஸ் முற்றிலும் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தார்.
முதலாவது செட்டில் அற்புதமாக விளையாடிய ஸாண்ட்ஸ்கல்ப் 6 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார்.
இரண்டாம் செட்டில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டதால் அல்காரெஸ் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஸாண்ட்ஸ்கல்ப் மீண்டும் 7 - 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று 2 செட்கள் முன்னிலையில் இருந்தார்.
மூன்றாவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய ஸாண்ட்ஸ்கல்ப் 6 - 4 என வெற்றிபெற்று 3ஆம் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேவேளை நான்கு செட்கள்வரை நீடித்த மூன்றாம் சுற்று போட்டியில் நடப்பு சம்பியன் ஜோகோவிச்சை 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் உலக தரவரிசையில் 50ஆம் இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் ப்றெண்டன் நக்காஷிமா வெற்றிகொண்டார்.
முதல் இரண்டு செட்களில் தலா 6 - 4 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற நக்காஷிமா, 3ஆவது செட்டில் 2 - 6 என தோல்வி அடைந்தார்.
எனினும் 3ஆவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய நக்காஷிமா 6 - 4 என வெற்றிபெற்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM