இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முழுமையாக  நிராகரிக்கிறோம் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அவசியம் - திலித் ஜயவீர

Published By: Vishnu

01 Sep, 2024 | 06:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வர உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சம்புத்த ஜயந்தி கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய  இராணுவத்தினர் நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். நாட்டுக்காக உயிர் தியாகம்  செய்ததால் தான் அரசியல்வாதிகள் இன்று சுதந்திரமாக மேடை போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்குடையது.  முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.ஆகவே இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாயின்  உண்மையை  கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும்.

இராணுவத்தினர் இன்று கௌரவமாக வாழவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அரசியலமைப்பின் ஊடாக முப்படையினரது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்பதையும் அரசியல் நோக்கத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்போம்.

இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்க அனைத்து அரசியல் தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தபால்மூல  வாக்களிப்புக்கு தகுதிப் பெற்றுள்ள இராணுவத்தினர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கௌரவம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36