தனது 05 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்த தந்தை ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.
தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் வெளிநாட்டில் வேலை செய்யும் மனைவியிடம் தனக்கு அதிகளவான பணம் வேண்டும் என்றும் மனைவியின் பெற்றோருக்கு அனுப்பும் பணத்தைத் தனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் தனது 05 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்து மனைவியின் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து பணம் கோரியுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரின் மனைவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், சந்தேக நபரின் மனைவியின் பெற்றோர் இது தொடர்பில் தெனியாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM