(ஆர்.யசி)

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் முன்னதாக இலங்கை வசம் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து உறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.