சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம். அபுல்கலாமின் நுால் வெளியீட்டு வைபவம்

Published By: Digital Desk 7

01 Sep, 2024 | 12:40 PM
image

சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். அபுல்கலாம்  அவர்களின் நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புகள் ” எனும் நூலின் வெளியீட்டு வைபவம் நேற்று சனிக்கிழமை  31 கொழும்பு 10ல் உள்ள வை.எம்.எம்.ஏ கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு பேராசிரியர் எம்.எஸ்.எம் ஜலால்தீன்  தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக உயர் நீதிமன்ற நீதியரசர்  ஏ.எச்.எம்.டி நவாஸ் ,கௌரவ அதிதியாக எம்.ஜுஹைர் (ஜனாதிபதி சட்டத்தரணி) முன்னாள் பா.உ.யும் ஈரான் தூதுவர், சிறப்பு பேச்சு பாயிஸ் முஸ்தபா, (ஜனாதிபதி சட்டத்தரணி) தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்  நூல் விமர்சனம் பேராசிரியர்  பி.ஏ ஹுஸைன் மியா (வரலாற்றாய்வாளர்) உலக பல்கலைக்கழக வருகை தர விரிவுரையாளர்  மற்றும் நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்  சிரேஷ்ட சட்டத்தரனி நியாஸ் சம்சுதீன் (ஓய்வுபெற்ற மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் ) ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணியின் குடும்ப உறுப்பினர்கள்,  தென்றல் எப்.எம் பொறுப்பதிகாரி  சட்டத்தரனி ஏ.எம். தாஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

அத்துடன் அமீன் எம் முஸ்தபா நன்றியுரை நிகழ்த்தினார்கள் . இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையின் அதிகாரிகள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நூல்  முஸ்லிம்களின் முன்னோடிகள் அராபியர் இந்நாட்டின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தொடர்புகள், வைத்திருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள், மகாவம்சம், தொலமியின் உலக வரைபடம் ,சீன யாத்திரிகன் பாகியன் என்பன அடங்குகின்றன. 

இஸ்லாத்தின் தோற்றத்தின் தொடர்ந்து இந்த நாட்டுக்கு வந்த அராபிய ல் அனைவரும் முஸ்லிம்களாக இருந்த காரணத்தினால் இஸ்லாம் மதம் இந்நாட்டிலும் பரவியது. இங்கு விஜயம் செய்த கடலோடிகளும் யாத்திரிகர்கள் இப்னு அப்பாஸ் ,அல்பலதுரி, சுலைமான் தாஜிர் ,தாபரி இப்னு சஹ்ரியார் இப்னு வகாப் அல் மசூதி போன்ற பல அராபியர்கள் விட்டுச் சென்ற தடயங்கள், வரலாறுகள் அடங்குகின்றன.

இவர்கள் பூர்வீக வரலாற்று காலம் தொட்டு முஸ்லிம்கள் இந் நாட்டில் மிகவும் அன்னியோன்னியமாக வாழ்ந்துள்ளனர் என பல வரலாற்றுத் தகவல்களை நூலாசிரியர் அபுல் கலாம் பதிவிட்டுள்ளார். இந் நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் நாட்டு நலனில் என்ன பங்களிப்பினை செய்தார்கள் என்பதற்கு இந்நூல் பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களின் இந் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு சிங்கள ,ஆங்கில மொழி மூலம் இந்நூல் மொழிமாற்றம் செய்யப்பட்டால்  ஏனைய சமூகங்களுக்கு  மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன்.

சிரேஷ்ட சட்டத்தரணி அபுல் கலாம் ,நூலாசிரியர் பற்றி இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாட்டுவானில் நம்மவரின் பங்களிப்பு என்ற தலைப்பில் 1986-87 காலப்பகுதியில் சுமார் 60 வாரங்கள்  ஒலிபரப்பான பேச்சுத் தொடரின்  செம்மை செய்யப்பட்ட அச்சுவடிமே இந்நூலாகும். 

எம்.எம். அபுல்கலாம் மருதமுனையில் பிறந்து வளர்ந்து உயர்நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணி ஆவார். கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முதல் தடவை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கு தெரிவானவர், முதுமானி பட்டப்படிப்பினை சுவீடன் பல்கலைக்கழகத்தில் கற்று பட்டத்தினை பெற்றவர்.

இவர் சிந்தாமணி- தினபதி பத்திரிகையாளர்,  இவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலத்தில் கப்பல் கூட்டுத்தாபணத்தின் நிறைவேற்று பணிப்பாளர், கிழக்கு பல்கலைக்கழகம் ,மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பிணர்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராகவும்  தேசிய ஜக்கிய முன்னணியின் பிரதித் தலைவராகவும் பணியாற்றியவர்.

அத்துடன் இலங்கை ஒலிபரப்பு மற்றும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனங்கள் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றியவர்,  முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அமைச்சராக இருந்த காலத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை  அமைச்சின் கீழ் உள்ள கூட்டாட்சி ஆதன முகாமைத்துவ சபையின் தலைவராகவும் 6 வருடங்கள் பணியாற்றியவர் தற்பொழுது இவர் கடந்த 12 வருடங்களாக  லண்டனில் வசித்து வருகின்றார். இவரது  ஒர் மகளும், மகனும் வைத்தியத்துறை பயில்வதோடு  மற்றவர் சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சாதனை படைத்த...

2024-09-12 17:57:01
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம்’...

2024-09-12 11:33:47
news-image

யாழ். மத்திய கலாசார நிலையத்தில் சார்க்...

2024-09-12 02:26:45
news-image

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை -...

2024-09-11 21:26:52
news-image

வவுனியாவில் “மகாகவி” பாரதியாரின் 103வது நினைவுதின...

2024-09-11 11:12:24
news-image

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய...

2024-09-10 11:02:28
news-image

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின்...

2024-09-10 10:42:19
news-image

கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி, புனித வேளாங்கன்னி...

2024-09-09 23:15:12
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2024-09-09 21:54:22
news-image

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய...

2024-09-09 17:48:29
news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14