கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கண்டாவளை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த வருடம் 30 ஆயிரம் கிலோ வெல்லங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ். துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பனை வெல்லங்களை மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்துவருகின்றனர். கடந்த வருடம் அதிகூடிய வெல்லங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளோம்.

தற்போது மக்கள் மத்தியில் நீரிழிவு என்கின்ற நோய் அதிகளவில் காணப்படுகின்றது. இதனால் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக சீனி பாவனை குறைந்த பனை வெல்லங்களை மக்கள் அதிகப்படியாக கொள்வனவு செய்கின்றனர்.

உள்ளுர் மக்கள் மட்டும் அல்ல வெளிநாடுகளில் வாழும் மக்களும் வெல்லங்களை கொள்வனவு செய்வதான கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ் துரைசிங்கம் மேலும் தெரிவித்தார்.