பசறை வீதி ஹிந்தகொட பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் கரகஹ உல்பத, நவஜனபதய, ஹகுன்னாவ, வெலிமடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
காயமடைந்த பெண் பதுளை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
35 வயதுடைய குறித்த பெண்ணின் கணவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், பெண்ணின் தகாத உறவே துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM