சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகும் வரை தலைவருக்குரிய அதிகாரங்களை கௌஷல்ய நவரத்ன பயன்படுத்தக்கூடாது - சட்டத்தரணிகள் பேரவை  

31 Aug, 2024 | 07:24 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகும் வரை அவர் தலைவருக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தக்கூடாது என சட்டத்தரணிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன பதவி விலகவேண்டும் என சட்டத்தரணிகள் பேரவையில் சனிக்கிழமை (31) ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்துக்கும் (ஜைக்கா) இடையில் இடம்பெற்ற உடன்படிக்கை மற்றும் கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பில் கௌஷல்ய நவரத்ன வெளிப்படைத்தன்மையை பேணவில்லை எனவும், அதன் மூலம் அவர் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் பேணவேண்டிய நம்பகத்தன்மையை மீறியிருக்கிறார் எனவும் சர்சைக்குரிய ஜைக்கா விவகாரம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐவரங்கிய குழு அறிக்கை சமர்ப்பித்தை அடுத்தே மேற்குறிப்பிட்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், இக்ரம் மொஹமட், ரின்ஸி அர்ஸகுலரத்ன மற்றும் ஜெஃப்ரி அழகரத்னம் ஆகிய ஐவரடங்கிய குழுவே சர்ச்சைக்குரிய சட்டத்தரணிகள் சங்கம் - ஜைக்கா கொடுக்கல், வாங்கல் குறித்து ஆராய்வுகளை மேற்கொண்டது.

அதற்கமைய அக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகும் வரை, அவர் தலைவருக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தக்கூடாது என சட்டத்தரணிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-06-13 08:54:11
news-image

கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழப்பு

2026-06-13 08:44:44
news-image

கொழும்பு, கொச்சிக்கடை சுற்றுவட்டாரத்தில் இன்று சிறப்பு...

2026-06-13 06:31:19
news-image

ரத்மலானாயில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள...

2026-06-13 06:07:42
news-image

இன்றைய வானிலை

2026-06-13 06:00:25
news-image

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு;...

2026-06-13 05:59:16
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறிய...

2026-06-13 05:52:02
news-image

பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு DNA பரிசோதனைக்கு...

2026-06-13 05:42:27
news-image

எரிபொருள் கொள்வனவு தகவல்களை மறைக்கும் அரசு...

2026-06-13 05:30:03
news-image

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனின் விடுதலைக்காக சுமந்திரன்...

2026-06-13 05:25:39
news-image

கனிய மணல் அகழ்வாராய்ச்சியினால் ஏற்படக்கூடிய சேதத்தை...

2026-06-13 05:22:12
news-image

செம்மணி விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்படும்:...

2026-06-13 05:10:43