இன்றைய சூழலில் மனிதனின் அபிலாசைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனை இந்த பிறவிலேயே இந்த தருணத்திலேயே சாதித்து, சாத்தியப்படுத்தி விட வேண்டும் என அனைவரும் தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.
இதில் யார் ஒருவர் இடத்தில் செல்வவளம் குவிந்திருக்கிறதோ அவர்களால் நினைத்த விடயத்தை நினைத்த தருணத்தில் செல்வ வளத்தை கொண்டு சாத்தியமாக்கி அதனூடாக மகிழ்ச்சியான அனுபவத்தை பெற இயலும்.
இதுதான் யதார்த்தமான இன்றைய வாழ்க்கை நடைமுறை.
இதனால் தான் எம்மில் பெரும்பான்மையானவர்கள் செல்வ வளத்தை நோக்கி தங்களது கவனத்தையும், ஆற்றலையும் செலுத்துகிறார்கள்.
இந்த தருணத்தில் எம்முடைய ஆன்மீகப் பெரியோர்களும் செல்வ வளத்தை அதிகரிக்க பல பயனுள்ள குறிப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
அதில் சிலவற்றை தொடர்ந்து காண்போம்.
பணம் வர வேண்டும் என்றால் செல்வம் குவிய வேண்டும் என்றால் முதலில் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் இல்லாமல் இருக்க வேண்டும்.
நேர் நிலையான ஆற்றல் அதிகமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக நாளாந்தம் எம் மீது குவியும் கண் திருஷ்டி மற்றும் கண்ணேறுகளை அன்றே அகற்ற வேண்டும். இதற்கு பொருத்தமான நாள் பௌர்ணமி தான்.
இதற்கு லவங்கப்பட்டை பொடி+மஞ்சள் பொடி+ சிறிதளவு பொடி உப்பு ஆகிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பௌர்ணமி தினத்தன்று மாலை வேளையில் முழு நிலவு ஒளிரும் தருணத்தில் லவங்கப்பட்டை பொடியை சிறிதளவு வலது கையில் எடுத்துக்கொண்டு, வீட்டிற்கு வெளியே சென்று வீட்டை நோக்கி நின்று கொண்டு அதாவது நிலவொளியில் நின்று கொண்டு வீட்டை நோக்கி கையில் இருக்கும் ஒன்றிணைக்கப்பட்ட (அதாவது லவங்க பட்டை பொடி +மஞ்சள் தூள் + சிறிதளவு உப்பு ஆகியவற்றின் கலவையை ) பொடியை வீட்டை நோக்கி சிறிது சிறிதாக ஊத வேண்டும்.
கையில் இருக்கும் லவங்கப்பட்டை பொடி காற்றில் பரவி, உங்களது வீட்டு வாசலில் முழுமையாக இருக்கும்.
இந்த வசியமும், மணமும் மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்கும் ஆற்றல் படைத்தவை. பௌர்ணமி தினத்தன்று இதனை மேற்கொள்ளும்போது நூறு சதவீதம் பலன் கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம்.
சில பெண்மணிகள் பௌர்ணமி தினத்தில் எங்களால் இதனை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டால் அந்த தருணத்தில் அல்லது அதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும்? என கேட்பார்.
இதனை வெள்ளிக் கிழமைகளிலும் குறிப்பாக வளர்பிறை வெள்ளிக் கிழமைகளிலும் மேற்கொள்ளலாம்.
இதன் போது முழுமையாக பலன் கிடைக்கவில்லை என்றாலும் நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலான பலன்கள் கிடைப்பதை காணலாம்.
அதே தருணத்தில் இந்த பரிகாரம் முழுமையான பொருளாதார ரீதியிலான பலனை வழங்கவில்லை என்று குறைப்பட்டுக் கொள்பவர்கள் பௌர்ணமி திதி தொடங்கியவுடன் உங்களது சமையலறையில் இருக்கும் துவரம்பருப்பு டப்பாவில் உங்களுடைய விரலில் அணிந்திருக்கும் தங்க மோதிரத்தையோ அல்லது உங்களுடைய நகை பெட்டிக்குள் இருக்கும் தங்க நாணயத்தையோ அதில் வைத்து விடுங்கள்.
அதனுடன் ஒன்று அல்லது இரண்டு வெள்ளி நாணயங்களையும் வைத்து விடுங்கள் அல்லது வெள்ளியாலான ஆபரணங்களையும் அதில் வைத்து விடுங்கள்.
பௌர்ணமி திதி நிறைவடைந்த பிறகு அதனை மீண்டும் நீங்கள் எடுத்து பாவிக்கலாம். நகைகளை பணப்பெட்டியிலோ அல்லது நகை பெட்டியிலோ மீண்டும் பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
இதனை பௌர்ணமி நாளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உங்களுக்கு செல்வ வள வசியம் ஏற்பட்டு, பணவரவு அதிகரிப்பதை அனுபவத்தில் உணரலாம்.
இந்த இரண்டு எளிய பரிகாரங்களையும் மேற்கொண்டு உங்களது செல்வ வளத்தை அதிகரித்து, நீங்கள் நினைத்ததை சாத்தியப்படுத்தி அதனூடாக மகிழ்ச்சியான அனுபவத்தை பெற வேண்டும் என வாழ்த்துகிறோம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM