குழந்தைகளின் இதய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை - ஃபான்டான் செயல்முறை

Published By: Digital Desk 2

31 Aug, 2024 | 04:55 PM
image

தெற்காசிய நாடுகளில் பிறக்கும் போதே இதய குறைபாடுகளுடன் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

 இத்தகைய பிறவி இதய குறைபாடுகளுடன் பிறக்கும் பத்து குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க வேண்டியது அவசியம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்நிலையில் பிறவி இதய குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஃபான்டான் செயல்முறை எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்

பொதுவாக பிறக்கும் அனைத்து குழந்தைகளின் இதயத்திலும் இரண்டு மேல் அறைகள் மற்றும் இரண்டு கீழ் அறைகள் என  நான்கு அறைகள் இருக்கும்.

 இவை முறையே அற்றியா என்றும், வென்றிரிக்கள்ஸ் என்றும் மருத்துவ மொழியில் குறிப்பிடுவார்கள்.

 இந்த தருணத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைக்கு வென்றிரிக்கள்ஸில் ஒன்று அல்லது இதயத்தில் முக்கியமான வால்வுகளில் ஒன்று பிறப்பதற்கும் முன் போதுமான அளவிற்கு உருவாகி, வளர்ச்சி அடைய வில்லை என்றால் அந்தக் குழந்தை ஒரே ஒரு வென்றிரிக்கள்ஸுடன் பிறக்கும். 

இந்த ஒரே ஒரு வென்றிரிக்கள் உடன் செயல்படாத மற்றொரு வென்றிரிக்கள்ஸின் செயலையும், இயங்காத இதய வால்வின் செயலையும் இவை செய்ய நேரிடும்.

 இதனால் அசுத்த ரத்தம் மற்றும் தூய்மையான ரத்தம் இரண்டும் ஒரே வென்றிரிக்கள் மூலம் பயணிக்க வேண்டியதிருக்கும்.

 இதனால் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு அவர்களுடைய குருதி ஓட்டத்தில் ஓக்சிஜனின் அளவு குறைவாக இருக்கும்.

இத்தகைய பாதிப்பை சீர்படுத்துவதற்காக தற்போது ஃபான்டான் செயல்முறை எனும் புதிய நவீன சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது. 

இந்த சிகிச்சை மூலம் குழந்தைகளின் இதயப் பகுதியில் இருக்கும் ஒரே ஒரு வென்றிரிக்கள் மூலமாக செல்லும் தூய்மையற்ற ரத்தத்தை நேரடியாக இதய அறைக்கு செல்லாமல், அதனை நுரையீரலில் தமனி பகுதிக்கு செல்லுமாறு சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

 இதன் மூலம் அவர்களுடைய இதய குறைபாடு நிவாரணமடையும். மேலும் இத்தகைய சத்திர சிகிச்சைகள் சிகிச்சையின் மூலம் நோயாளியின் வாழ்நாளும் அதிகரிக்கும்.

குழந்தை பிறந்து இரண்டு வயது முதல் பதினைந்து வயது வரை உள்ளவர்களுக்கு இத்தகைய சத்திர சிகிச்சை பலனளிக்கும்.

இதன்போது மருத்துவர்கள் குழந்தைக்கு ட்ரான்ஸ்தேராசிக் எக்கோ கார்டியோ கிராம் ,எலக்ட்ரோ கார்டியோ கிராம், ஹார்ட் கதீட்டரைசேஷன், நுரையீரல் இயங்குத்திறன், சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு, அவர் இத்தகைய சத்திர சிகிச்சைக்கு தகுதியானவரா..!? என்பதனை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.‌

இத்தகைய சத்திர சிகிச்சை குறிப்பாக ஹைபோபிளாஸ்ரிக் லெஃப்ட் ஹார்ட் சிண்ட்ரோம், ஹைபோபிளாஸ்ரிக் ரைட் ஹார்ட் சிண்ட்ரோம், ட்ரைகுஸ்பைட் அட்ரேஸியா எனும் பாதிப்பு, பல்மனோரி அட்ரேசியா, இம்பேலன்ஸ் ஆர்ட்டியோ வென்ரிகுலர் கெனால் டிஃபெக்ட் போன்ற இதய குறைபாடுகளுக்கும் இத்தகைய நவீன சிகிச்சை பலனளிக்கும்.

இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகளின் குருதி ஓட்டத்தில் ஓக்சிஜனின் அளவு இயல்பாக இருக்கும். 

இதுவே அவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு பொருத்தமானதாக இருந்து, அவர்களின் ஆயுளை அதிகரிக்கிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அதிகபட்சமாக பதிமூன்று நாட்கள் வரை வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் இவர்கள் இருப்பார்கள்.

 இத்தகைய நவீன சத்திர சிகிச்சை ஐந்து மணி தியாலம் வரை நீடிக்கும். மேலும் சத்திர சிகிச்சைக்குப் பிறகு வைத்தியரின் பரிந்துரையை பெற்றோர்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

வைத்தியர் முத்துக்குமரன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு...

2024-10-01 16:55:55
news-image

எக்டோபிக் பீட்ஸ் எனும் சமச் சீரற்ற...

2024-09-30 17:00:57
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டையான பாத...

2024-09-26 16:56:32
news-image

சர்க்கரை நோயால் செவித்திறன் பாதிப்பு ஏற்படுமா..?

2024-09-25 16:21:32
news-image

மூட்டு பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2024-09-24 17:58:19
news-image

சர்கோபீனியா எனும் தசை சிதைவு பாதிப்பிற்குரிய...

2024-09-23 17:07:13
news-image

கல்லீரல் அழுத்த பாதிப்புக்கான சிகிச்சை

2024-09-23 16:39:09
news-image

இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2024-09-20 02:54:17
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41
news-image

செப்சிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-09-14 16:45:08
news-image

பி சி ஓ டி பாதிப்பு...

2024-09-14 16:14:37