(எம்.ஆர்.எம்.வஸீம்)

Image result for வைத்தியர் ஹரித்த அளுத்கே

சைட்டம் நிறுவனத்துக்கு தனிநபர் உரிமையை ரத்துச்செய்வதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்கின்றோம். ஆனால் அதனை பங்குச்சந்தையில் பட்டியல் படுத்தப்பட்ட நிறுவனமாக மாற்றுவதாக தெரிவித்துள்ள தீர்மானத்துக்கு இணங்க முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.

அத்துடன் சைட்டம் நிறுவனத்தை அரசுடமையாக்கும் தீர்மானத்துக்கு ஜனாதிபதி வருவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதுவரைக்கும் எமது போராட்டத்தை தொடர்வோம் எனவும் தெரிவித்தார்.