ஸ்ருதிஹாசனுக்கு கைம்மாறு செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Published By: Digital Desk 2

31 Aug, 2024 | 04:13 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர தோற்ற புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' ஆகிய படங்களை இயக்கி இந்திய திரையுலகிலேயே விரைவாக முன்னணி நட்சத்திர இயக்குநர் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், சத்யராஜ், மகேந்திரன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

 கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். 

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

'கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் சௌபின் ஷாகிர்- நாகார்ஜுனா ஆகியோரின் கதாபாத்திரத்தின் பெயரும், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்ற புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், பிரீத்தி எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவரது கதாபாத்திரத் தோற்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

சுப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில் உலக நாயகனின் வாரிசு இடம்பெற்றது குறித்து திரை உலகினரிடையே பல்வேறு கருத்துக்கள் எழுந்திருக்கிறது.

 இந்நிலையில் உலக நாயகனின் வாரிசான ஸ்ருதிஹாசனின் கருத்தியலில் உருவான 'இனிமேல்' எனும் இசை அல்பத்தில் நடிப்பதற்கு அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பளித்தார். இதன் மூலம் இயக்குநராக இருந்த லோகேஷ்  கனகராஜ் நடிகராகவும் உயர்ந்தார்.

 இதற்கு கைமாறாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-  தான் இயக்கி வரும் 'கூலி' திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் என திரையுலகினர் விளக்கமளிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47