சமுர்த்தி கூட்டத்திற்குச்  சென்றுகொண்டிருக்கும்போது கர்ப்பிணித் தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி  விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த கர்ப்பிணிப்பெண் வீதியில் மயங்கி விழந்ததையடுத்து உறவினர்களும் அயலவர்களும் அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்றபோதிலும் அதற்கிடையில் அவரது உயிர்பிரிந்துவிட்டது. 

இறக்கும்போது கர்ப்பவதியாக இருந்தமையால் பிரேத பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என சட்டவைத்திய விசேட வைத்திய நிபுணர் தெரிவித்ததையடுத்து சடலம் பிரேத பரிசேதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கான போக்குவரவுச் செலவீனங்களைச் சுகாதாரத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.