உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் என கூறி அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் பெண் உட்பட இருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ, கலகெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆணும், பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 29ஆம் திகதி தர்கா நகரத்தில் உள்ள நகை கடை ஒன்றுக்கு சென்று தங்களை இறைவரி திணைக்கள அதிகாரிகள் என அடையாளப்படுத்தி குறித்த நகைக்கடையின் வருமான வரி ஆவணங்கள் மற்றும் வணிகப் பதிவை சரிபார்த்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நகைக்கடையில் இருந்த ஊழியர்கள் இந்த இருவர் மீதும் சந்தேகம் கொண்ட நிலையில் அவர்களை பிடித்து அளுத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்த அடையாள அட்டை போலியானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM