2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

31 Aug, 2024 | 12:34 PM
image

மேஷம்

மன உறுதியுடன் எதையும் செயல்படுத்தும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும், குரு தனஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும், உங்களின் யோகாதிபதி சந்திரன் பார்ப்பதும் தொழில் முன்னேற்றத்தையும் வாழ்க்கையில் லட்சியங்களை செயல்படுத்துவதில் மேன்மையையும் அடையச் செய்யும்.

லாபஸ்தானத்தில் சனி அமர்ந்து ராசியை வக்கிர கதியில் பார்ப்பதால் முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத வளர்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வருபவருக்கு உங்களின் முயற்சி நற்பலனை பெற்றுத் தரும். சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வது உங்களின் பூர்வீக சொத்து சம்பந்தமான விடயங்கள் நல்ல வளர்ச்சியை பெற்றுத் தரும்.

விவசாய பொருட்கள் விற்பனையிலும், விளை பொருட்கள் மூலமும் ஆதாயம் பெறுவீர்கள். தனஸ்தானாதிபதி சுக்கிரன் நீசம் பெறுவதால் கடன் பெறவேண்டிய சூழ்நிலை உண்டாகும். அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். நினைத்த காரியத்தை வெல்ல சில நேரம் சிரமம் கொள்ளவேண்டிவரும். 

எதிலும் உங்களின் சுய முயற்சி நற்பலனை பெற்றுத் தரும். மாணவர்கள் கல்வி முன்னேற்றத்தை பெற்றுத் தரும். விரும்பிய சில காரியங்கள் விரைவில் நிறைவேறும். உடல் நலனில் முன்னேற்றமும் பொருளாதாரத்தில் தன்னிறைவும் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 09-09-2024 திங்கள் காலை 09.24 முதல் 11-09-2024 புதன் மாலை 06.05 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு பூ மாலை அணிவித்து நெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் அனுகூலமாக அமையும்.

ரிஷபம்

சுயமுயற்சிகள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு ராசியில் அமர்ந்து பார்க்கும் இடங்கள் சிறப்பாக அமையும். ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து நீசம் பெற்று லாபஸ்தானத்தை பார்வையிடுவதும், விரையாதிபதி செவ்வாய் தனஸ்தானத்தில் அமர்வதும் வெளிநாடு சார்ந்த தொடர்புகளினூடாக உங்களை மேல் நிலைக்கு கொண்டு சேர்க்கும்.

எதிலும் எதிர்ப்புகள் குறையும். நீங்கள் எதை செயல்படுத்த நினைக்கின்றீர்களோ அதற்கு தகுந்த உதவிகளும் முயற்சிகளுக்கு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். திறமையும் எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படும் தன்மையும் உங்களின் செயல்களுக்கு உறுதுணையாக அமையும். 

நிலையான தொழில் வாய்ப்புகள் அமையப் பெறுவீர்கள். குறுகிய காலத்தில் உங்களின் தொழில் வளம் பெற்று மேன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமையும். எதிர்காலத்தில் உங்களின் கலை நிகழ்ச்சிகள் பிரபலமாகி உங்களின் தனித்தன்மை மேம்படும். 

மீடியா, தொலைத்தொடர்பு மூலம் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமைய பெறுவீர்கள். பொது விடயங்களில் ஈடுபாடு கொண்டாலும் அதில் முழுமையாக இல்லாமல் நினைத்ததை நடத்திக்கொள்ள சிலரின் உதவிகளை பெற்று வளம் பெறுவீர்கள். 

அரசியலில் ஈடுபாடுகள் இருந்தாலும் உங்களின் செல்வாக்குகளை தக்க வைத்துக்கொள்வீர்கள். செய்யும் தொழிலை வளம் பெறச் செய்யவும், கொடுத்த, வாக்குகளை காப்பாற்றிக்கொள்ளவும் தொடர்ந்து செயற்பட்டு நன்மையை பெறுவீர்கள். இம்மாதம் உங்களின் தேவைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டம நாட்கள்:

11-09-2024 புதன் மாலை 06.06 முதல் 13-09-2024 வெள்ளி இரவு 12.22 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வியாழக்கிழமை காலை 06 - 07.30 மணிக்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு அருகம்புல் மாலை சாற்றி வேண்டிக்கொள்ள தடைப்பட்ட காரியம் அனுகூலமாகும்.

மிதுனம்

புதிய முயற்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபாதிபதி ராசியிலும், தனஸ்தானாதிபதி சந்திரன் தனஸ்தானத்திலும் முயற்சிகளுக்கு பலம் பெற செய்ய சூரியன் ஆட்சி பெற்று ராசி அதிபதியுடன் இணைந்திருப்பதும் உங்களின் அனைத்து காரியங்களுக்கும் ஏற்றம் பெற்று திறன் கொண்டு செயல்படுவதுடன் நீங்கள் என்ன நினைத்து செயல்படுகிறீர்களோ அதுவரை உங்களின் முயற்சி தொடரும்.

கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வீர்கள். சரியான நேரத்தில் நீங்கள் செயல்பட்டு அதற்குரிய நற்பலனை பெற்றுவிடுவீர்கள். எதிர்கால திட்டங்களையும் தொழில் வாய்ப்பையும் சிறிது காலம் தள்ளிப்போடுவது நல்லது. பாக்கியஸ்தானத்தில் சனி அமர்ந்து லாபஸ்தானத்தை வக்கிரகதியில் பார்ப்பதால் வக்கிர நிவர்த்தி வரை பொறுத்திருந்து செயல்படுவதன் மூலம் வரும் சிக்கலில் இருந்து மீண்டு வருவீர்கள்.

பொது விடயங்களில் முழு ஈடுபாடுகள் இல்லை என்றாலும் பொது நல காரியங்களுக்கு உடன் இருந்து உதவி செய்வீர்கள். கலைத்துறையினர் சிலருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள். தனித்திறமையுடன் உங்களின் செயல்பாடுகள் இருக்கும். 

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிக்கொள்வீர்கள். திட்டமிட்ட காரியத்தை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டு வருவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்க மாட்டீர்கள். செய்வன திருந்தச் செய்து, உங்களின் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்வீர்கள். உங்கள் பொருளாதார நிலை வளம் பெற்று அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்:

13-09-2024 வெள்ளி இரவு 12.22 முதல் 16-09-2024 திங்கள் அதிகாலை 04.33 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் ஆடை சாற்றி, மூன்று நெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் வெற்றியும் தனவரவும் கிட்டும்.

கடகம்

திடமான நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியிலும், குரு லாபஸ்தானத்தில் அமர்ந்து பார்க்குமிடம் சிறப்பாக அமையும். தனஸ்தானதிபதி சூரியன் ஆட்சி பெற்று அமைவது, உங்களின் தொழிலில் பொருளாதார வளர்ச்சியும் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனையும் பெற்றுத் தரும்.

உங்களின் அரசியல் செல்வாக்கு உயரும். உங்களின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை பெற்றுத் தருவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு பதவி உயர்வும் பரிசும் கிடைக்கப்பெற்று வளம் பெறுவீர்கள். பொது வாழ்வில் உங்களுக்கு இருக்கும் நல்ல அனுபவம் மூலம் பல காரியங்களை செயல்படுத்தி, பலரும் வளம் பெறும் வாய்ப்பை பெற்றுத் தருவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வி மேன்மை பெறக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பணியில் இருப்பவருக்கு இடமாற்றம் மூலம் நல்ல வளர்ச்சி உண்டாகும். குறைந்தபட்ச வருமானத்தை தக்கவைத்துக்கொள்வீர்கள். செய்யும் சுயதொழிலில் முன்னேற்றம் பெற உங்களின் செயல் சிறப்பாக அமையும். எதையும் நினைத்தவுடன் செயல்பட வேண்டுமென்று நினைத்தாலும் சிலவற்றில் தடங்கல் உண்டாகும்.

அட்டம சனி காலமாக இருந்தாலும் வக்கிரகதியில் இருப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் இனி இருக்காது. வரும் குரு பெயர்ச்சி வரை நீங்கள் யாருக்கும் பிணையம் இடுவதை தவிர்த்துவிடுவது நல்லது. திறம்பட செயல்படும் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராமல் சரி செய்துகொள்வீர்கள். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான காலமாக அமையும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்:

16-09-2024 திங்கள் அதிகாலை 04-34 முதல் 18-09-2024 புதன் காலை 07.20 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளி, சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு ஒரு இலுப்பெண்ணெய் தீபமும் ஏற்றி வர தடைகள், கஷ்டங்கள் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.

சிம்மம்

எதிலும் துணிவுடன் செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு யோகாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்திலும், ராசிநாதன் ராசியிலும் அமர்வதும் சனி வக்கிர பார்வை பெறுவதும் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், தொழிலில் வளம் பெறவும் வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத திருப்பங்களும் அதிர்ஷ்ட பலன்களும் தேய்பிறையில் பிறந்தவர்களுக்கும், சனி ஆறு, எட்டு, பனிரெண்டுகளில் மறைந்த ஜாதகர்களின் வளர்ச்சியும் சிறப்பாக அமையும்.

தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பதால் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். சொன்னதை செய்து முடிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். அரசியலில் உங்களின் மதிப்பும் செல்வாக்கும் உயரும். 

சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். முன்கூட்டியே யோசித்து சில காரியங்களை செயல்படுத்தி நன்மை அடைவீர்கள். குறுகிய முதலீடுகளால் செய்து வரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வசதிகளுடன் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று, மேலும் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.

காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் கொண்ட கொள்கையை விடாமல் செயல்படுத்தி நலம் பெறுவீர்கள். பொது வாழ்வில் மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவீர்கள். வங்கி மூலம் கடன் பெறுதல், வண்டி வாகனம் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அமையும். பொருளாதார வளர்ச்சிகளில் முன்னேற்றம் பெறுவீர்கள். பணப்புழக்கம் இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 

18-09-2024 புதன் காலை 07.21 முதல் 20-09-2024 வெள்ளி காலை 09.38 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி எள் கலந்த அன்னம் நைவேத்தியம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியை தரும்.

கன்னி

காலத்தை கணக்கிட்டு ஒவ்வொரு செயலும் செய்யும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதாலும் லாபாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் ஆட்சி பெறுவதாலும் உங்களின் அனைத்து காரியங்களிலும் நன்மைகளையும் தொழிலில் தடைகள் நீங்கி வளமும் பெறுவீர்கள். எதை செய்தாலும் அதில் கவனம் செலுத்தி உங்களின் காரியங்களை மேன்மைபடுத்திக் கொள்வீர்கள். 

எதிர்ப்புகள் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள். சனி வக்கிரகதி பெறுவதால் உங்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகள் சற்று தடைபடும். குரு பார்வையால் சில காரியங்கள் சிறப்பாக அமையும். சிலருக்கு திருமண தடைகள் நீங்கி, திருமண காரியம் சிறப்பாக அமையும். பொது வாழ்வில் ஈடுபாடு கொண்டாலும் உங்களின் அன்றாட வாழ்க்கை சூழ்நிலைக்கு தகுந்தபடி காரியத்தை சரி செய்து கொள்வீர்கள். 

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புகளை தக்க வைத்துகொள்வீர்கள். எதற்கும் தயக்கம் காட்டாமல் விடாமுயற்சி செய்து, வேண்டிய காரியங்களை சிறப்பாக செய்துகொள்வீர்கள். தொழிலில் முன்பை விட வளர்ச்சியை பெற முடிந்த உதவிகளை செய்வீர்கள். கொடுக்கல் -வாங்கலில் சிலருக்கு சில சங்கடங்கள் உண்டாகும். 

உங்களிடம் கடன் பெற்றவர் உங்களிடம் ஏதாவது வாக்குவாதம் செய்ய வேண்டிவரும் என்பதால் முடிந்த வரை பிறருக்கு பண உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. சொந்த உறவுகளில் சிலருக்கு மனக் கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் உறவுகளில் கவனமாக செயற்படுவது நல்லது. பொருளாதாரம் தன்னிறைவு பெறும்.

சந்திராஷ்டம நாட்கள்:

20-09-2024 வெள்ளி காலை 09.39 முதல் 22-09-2024 ஞாயிறு பகல் 12.27 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், ஒரெஞ்ச்

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு அன்று ராகு காலத்தில் 04.30 - 06.00 நவகிரக வழிபாடு செய்து ஐந்து நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கி வர சகல காரியங்களிலும் நன்மையை தரும்.

துலாம்

சோதனைகளை வென்று சாதனைகள் செய்யும் துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் குரு தனஸ்தானத்தை பார்ப்பதும் லாபாதிபதி ஆட்சி பெற்று அமைவதும் தொழிலில் ஓரளவு நற்பலன்களை பெற்றுத் தரும். எதிலும் உங்களின் பங்கு சிறப்பானதாக அமையும். நீங்கள் எதை செய்தாலும் சுய முயற்சியுடன் செய்து கொள்ள, நற்பலன்கள் உண்டாகும். எந்த கிரகமும் உங்களி்ன் ராசியை பார்க்கவில்லை என்றாலும் கிரகங்கள் அமர்வதன் மூலம் சில விடயங்கள் தானே நடக்கும்.

அரசியலில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தனித்திறமையுடன் செயற்படுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். கொடுக்கல் - வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உறவுகளின் மூலம் சில காரியங்கள் தடையின்றி நடக்கும். பராமரிப்பு செய்து,  வீட்டை மேம்படுத்தும் பணிகளை சிலர் செய்வார்கள்.

கலைத்துறையினருக்கு வெளியூர் சென்று வருவதும், நிகழ்ச்சிகளில் உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக செயற்படுவீர்கள். எதற்கும் துணிந்து செய்யும் உங்களின் நிலைகள் அடிக்கடி மாறுபடும் என்றாலும் நீங்கள் ஸ்திரத்தன்மையுடன் நடந்துகொள்வீர்கள். மாணவர்களின் கல்வி சிறப்பாக அமையும். குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள். 

சிலருக்கு அதிக செலவுகள் வரும். செலவுகளுக்காக கடன்படுவதும் தங்க நகை அடகு வைப்பது உண்டாகும். யாருக்கும் கடன் வாங்கி கொடுத்தல், பிணையம் இடுதலை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உங்களின் பொருளாதார நிலை சீராக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்:

22-09-2024 ஞாயிறு பகல் 12.28 முதல் 24-09-2024 செவ்வாய் மாலை 04.28 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஒரெஞ்ச், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து எட்டு நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள அனைத்து காரியங்களும் நன்மையாக அமையும்.

விருச்சிகம்

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயற்பட்டு வரும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தை பார்த்து வருவதும், குரு பார்வையுடன் சனியின் பார்வை பெறுவதும் எந்த காரியத்திலும் ஸ்திரத்தன்மை கொண்டு செயல்படும் பாக்கியத்தை உண்டாக்கும். நல்ல காரியங்கள் இனிதே நடக்கும். சிலருக்கு திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும்.

தொழிலில் எண்ணம் போல் சிறப்பாக செயல்பட்டு. உங்களை மேன்மைபடுத்திக்கொள்வீர்கள். உத்தியோகத்திலும் பணியிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். இராணுவம், காவல், தீயணைப்புத்துறையில் பணிகள் சிறப்பாக அமையும். தொடர்ந்து உங்களின் செயற்பாடுகள் நன்றாக அமையும். 

அரசியல் சார்ந்த பணிகளில் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். விளையாட்டுத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அமையும். உங்களை சார்ந்தவர்களுக்கு கைகொடுத்து சிறப்பாக செயற்படும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். எதையும் முன்கூட்டியே செய்துகொள்வீர்கள். 

விவசாய பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலைவாய்ப்புகளுக்காக முயற்சி செய்பவருக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையும். சிலருக்கு சொந்த தொழில் அமையும். சொந்தங்கள் உறவுகளையும் விரிவுபடுத்திக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் அமையும். 

வங்கி மூலம் கடன் பெறுவதும், ஏற்கனவே பெற்ற கடன்களை தீர்க்கவும் வாய்ப்புகள் அமையும். நல்ல காரியம் சிறப்பாக அமையும். கலைத்துறையினர் பரிசுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 

24-09-2024 செவ்வாய் மாலை 04.29 முதல் 26-09-2024 வியாழன் இரவு 10.34 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், சிவப்பு, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடும், செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியர் வழிபாடும் செய்து வர, நல்ல காரியங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும்.

தனுசு

தன் செயலை தானே செய்துகொண்டு செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு யோகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று அமைவதும் தொழில் ஸ்தானாதிபதி புதன் சூரியனுடன் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை செய்வதும் லாபாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

உங்களின் சொந்த முயற்சிக்கு நல்ல பலன் உண்டாகும். வங்கி மூலம் கடன் பெறும் வாய்ப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் சீராகும். பொருளாதார நிலையில் சற்று நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு இடமாற்றம், பதவி மாற்றம் உண்டாக வாய்ப்பு அமையும். 

வெளி வட்டார பழக்கம் கூடுதல் பலனைப் பெற்றுத்தரும். உங்களின் நாளாந்த கடமைகளை சீராக செய்து முடிப்பீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை மூலம் சிலருக்கு அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். கலைத்துறையினர் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களின் படிப்பில் அக்கறை எடுத்துக்கொண்டு முன்னேறுவீர்கள். 

பொது வாழ்வில் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவீர்கள். உங்களை நம்பியவருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். பாதியில் நின்ற காரியம் மீண்டும் செயல்பட தொடங்கும்.  

பெண்கள் தொழிலும் உறுதியான நிலைப்பாடுகளால் ஏற்றம் பெறுவீர்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு என்று எதையும் சேர்த்து வைக்க ஆசைபடமாட்டீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 

26-09-2024 வியாழன் இரவு 10.35 முதல் 29-09-2024 ஞாயிறு காலை 07.16 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு. 

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், செவ்வாய், ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

21-09-2024 அன்று சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை விநாயகர் வழிபாடு செய்து, அருகம்புல் மாலை சாத்தி வேண்டிக்கொள்ள, சகல காரியங்களிலும் நற்பலன்கள் உண்டாகும்.

மகரம்

கனவை நனவாக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும் மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் சந்திரன் பார்வை பெறுவதும் பொருளாதார நிலையில் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன்களை பெற்றுத்தரும். 

 எட்டாமிடத்தில் சூரியன் ஆட்சி பெற்றிருப்பது உங்களின் அரசியல் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

நினைத்த காரியம் உடனே நடக்கும் சந்தர்ப்பம் அமையும். சந்திரன் ஆட்சி பெற்று உங்களின் ராசியை பார்ப்பதால் மன அமைதியும், பெரியவர்களின் ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். காலத்துக்கு உங்களின் செல்வாக்கு நிலைக்கும்படியான நல்ல சூழ்நிலை உருவாகும். 

உங்களின் ராசிநாதன் தன ஸ்தானத்தில் அமர்ந்து வக்கிரகதியில் இருப்பதால் விரைவில் இம்மாத இறுதியில் நல்ல பலன்களை பெறுவீர்கள். ஆறாம் இடத்தில் செவ்வாய் அமர்வது உங்களின் பொது எதிரிகளால் இருந்த தொல்லை, நீங்கி மேன்மை பெறுவீர்கள். எல்லா விடயங்களையும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளாமல் அதற்குரிய நேரத்தில் கலந்துகொள்வது உங்களுக்கு நற்பலனை பெற்று தரும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காவிடடாலும் உங்களின் நிலைப்பாடுகள் சிறப்பாக அமையும். பொது வாழ்வில் இருப்பவர்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சிறப்பாக அமைவதுடன் புதிய பொறுப்புகளையும் ஆக்கபூர்வமான செயல்களையும் செய்யத் தொடங்கிவிடுவீர்கள்.

குருவின் பார்வையும் உங்களுக்கு நல்ல சூழ்நிலையில் அமைந்தால் சில காரியம் உங்களின் முயற்சி இல்லாமல் கூட விரைவில் நடக்க தொடங்கும். சொன்னால் செய்து கொடுப்பதற்கு உதவிகள் செய்பவர்கள் உங்களை நாடி வருவார்கள். புதிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட தொடங்குவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:

01-09-2024 ஞாயிறு இரவு 11.54 முதல் 04-09-2024 புதன் காலை 10.49 மணி வரையும்.

29-09-2024 ஞாயிறு காலை 07.07 முதல் 01-10-2024 செவ்வாய் மாலை 05.54 மணி வரையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், ஒரெஞ்ச்

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடும் வைரவர் வழிபாடும் செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள, அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும்.

கும்பம்

கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்கும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்து சூரியனின் பார்வை பெறுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி புதனின் பார்வை பெறுவதும் கடந்த கால சங்கடங்களிலிருந்து விலகி, சிறப்பான நற்பலன்களைப் பெறுவீர்கள். எதிலும் நீங்கள் செயற்பட தொடங்கும்போது யோசித்து செயற்பட்டாலும் சிரமமின்றி காரியம் நிறைவேறும்.

அரசியலில் பல சோதனைகளை சந்தித்து வந்தாலும் உங்களின் சுயசெல்வாக்குக்கு எந்த பங்கமும் இருக்காது. சில அரசியல் பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பொது வாழ்வில் தூய்மையாக இருக்கும்படி செயற்பட வேண்டிவரும். 

செய்யும் தொழிலை தெய்வமாக கருதி அதில் அக்கறை எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். பாதுகாப்பான சூழ்நிலைகளை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். எதிலும் முன்யோசனையுடன் செயற்படுவீர்கள். கலைத்துறையினர் சில தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருந்தாலும் அதிலிருந்து மீண்டுவிடுவீர்கள். 

யாரையும் நம்பிக்கொண்டிருக்கமாட்டீர்கள். நீங்களே தஞ்சமென்று வந்தவருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். குரு பார்வை உங்களின் மறைவு ஸ்தானமாகிய எட்டாமிடத்தையும், பனிரெண்டாமிடத்தையும் பார்ப்பதால் அந்த இடத்துக்குரிய பிரச்சினைகள் ஓரளவுக்கு சீராகும். 

பெண்களுக்கு பல குடும்ப பிரச்சினைகள் சரியாகும். சுயதொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். கடந்தகால நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, மன நிம்மதி அடைவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 

04-09-2024 புதன் காலை 10.50 முதல் 06-09-2024 வெள்ளி இரவு 10.32 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு. தென்கிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், எள் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ள தடைகள் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.

மீனம்

கண்ணும் கருத்துமாய் காரியத்தை செய்து முடிக்கும் மீன ராசி வாசகர்களே, 

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தை பார்வையிடுவதும், ராசிநாதன் குரு பார்வையிடும் இடங்கள் சிறப்பான நற்பலன்கள் பெற்றுத் தரும். பூர்வபுண்ணியாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்பாராத தன வரவு உண்டாகும். 

நீண்ட நாட்கள் வாராக்கடன் சிலர் திருப்பிதரும் சூழ்நிலை உண்டாகும். முக்கியமான சில காரியங்கள் விரைவில் முடிக்கும் சூழ்நிலை உருவாகும். ஆன்மிக தொண்டுகளையும், ஆன்மிக யாத்திரையும் சென்று வருவீர்கள். காலத்தையும் நேரத்தையும் வீண் செய்யாமல் மேலும் துரிதமாக செயல்பட்டு முடித்து கொடுப்பீர்கள். 

விரைய சனி காலம் என்பதால் எதிர்பாராத நெருக்கடிகள் உன்டாகும். அத்தியாவசிய செலவுகள் செய்து விட்டு, சுப விரையமாக திருமண காரியங்கள், வீடு கட்டுதல், காலிமனைகள் வாங்கிப்போடுவதன் மூலமாக தேவையற்ற செலவுகள் குறைந்து கொள்ளலாம். வெளியூர், வெளிநாடுகள் பயணம் நல்ல பலனை பெற்று தரும். 

முக்கிய பிரமுகரின் சந்திப்பு மூலம் உங்களின் செயல்கள் சிறப்பாக அமையும். கலைதுறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும் இசைக்கலைஞர்களுக்கு சிலருக்கு கௌரவ பரிசும், பாராட்டும் கிடைக்கும். புத்திரர்களின் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும்.

பெண்களில் சிலருக்கு நல்ல வரன் அமையும். தொழிலில் சற்று முன்னேற்றம் ஏற்பட நல்ல வாய்ப்பு அமையும். கடன் வாங்கும் சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:

06-09-2024 வெள்ளி இரவு 10.33 முதல் 09.09.2024 திங்கள் காலை 09.23 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஒரெஞ்ச், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அரளி பூ அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ள, தடைபட்ட காரியம் சிறப்பாக அமையும்.

கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீச்சமடைந்த கிரகங்களுக்குரிய வாழ்வியல் பரிகாரம்...?

2024-10-09 17:13:33
news-image

திடீர் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான சூட்சமமான வழிபாடு...!!?

2024-10-08 17:13:01
news-image

இல்லங்களில் சகல ஐஸ்வரியங்களும் தங்குவதற்கான எளிய...

2024-10-07 15:06:17
news-image

சுக்கிர பகவானின் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கான...

2024-10-05 21:38:45
news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33
news-image

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான...

2024-09-28 18:24:53
news-image

காரிய தடை விலகுவதற்கான எளிய பரிகாரம்

2024-09-26 18:39:17