யாழில் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 3

31 Aug, 2024 | 08:59 AM
image

யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு வியாழக்கிழமை (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (30) அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஹுவல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...

2025-06-22 10:56:34
news-image

வவுனியாவில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர்...

2025-06-22 10:55:18
news-image

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் ;...

2025-06-22 10:30:30
news-image

சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு ஐக்கிய நாடுகளின்...

2025-06-22 09:58:27
news-image

தனியார் விருந்தினர் விடுதியில் மின் தூக்கியில்...

2025-06-22 09:34:41
news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18