(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் மிக மோசமான நிலையிலிருந்த இலங்கை, கமிந்த மெண்டிஸின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் மீண்டெழுந்தது.
இங்கிலாந்து முதலாவது இன்னிங்ஸில் குவித்த 427 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 231 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தபோதிலும் இலங்கைக்கு பலோ ஒன் கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்த 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க 256 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் சதங்கள் குவித்த ஜோ ரூட், கஸ் அட்கின்சன், 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த அசித்த பெர்னாண்டோ ஆகியோரின் பெயர்கள், வரலாற்று முக்கியம்வாய்ந்த லோர்ட்ஸ் கௌரவிப்பு (Lords Honounrs Board) பலகையில் பொறிக்கப்பட்டது.
இலங்கையின் முன்வரிசை வீரர்கள் கவனக்குறைவான அடி தெரிவுகளால் விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.
ஆரம்ப வீரர்களான நிஷான் மதுஷ்க (7), திமுத் கருணாரட்ன (7), பெத்தும் நிஸ்ஸன்க (12) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (35 - 3 விக்.)
அனுபசாலிகளும் முன்னாள் தலைவர்களுமான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் அணியை மீட்டெக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தனர்.
அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம் நுழைந்த அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுக்கு லோர்ட்ஸ் அரங்கு அதிர்ஷ்டம் கொடுக்கவில்லை. அவர் ஓட்டம் பெறாமலேயே ஆட்டம் இழந்தார். (83 - 5 விக்.)
மொத்த எண்ணிக்கை 87 ஓட்டங்களாக இருந்தபோது தினேஷ் சந்திமால் (23) களம் விட்டகன்றார்.
தொடர்ந்து பின்வரசை வீரர்களான மிலன் ரத்நாயக்க (19), ப்ரபாத் ஜயசூரிய (8), லஹிரு குமார (0) ஆகியோருடன் இணைந்து 7ஆம், 8ஆம், 9ஆம் விக்கெட்களில் முறையே 31 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களையும் 42 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.
கடைசியாக ஆட்டம் இழந்த கமிந்து மெண்டிஸ் 120 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைப் பெற்றார். தனது 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் பெற்ற 3ஆவது அரைச் சதம் இதுவாகும்..
இதுவரை அவர் 8 இன்னிங்ஸ்களில் 6 சந்தர்ப்பங்களில் 50 மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவற்றில் 3 சதங்கள் அடங்குகின்றன.
பந்துவீச்சில் மெத்யூ பொட்ஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஓல்லி ஸ்டோன் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 427 ஓட்டங்களைப் பெற்றது.
தனது இன்னிங்ஸை 81 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த கஸ் அட்கின்சன் தனது 5ஆவது டெஸ்டில் கன்னிச் சதத்தை லோர்ட்ஸ் அரங்கில் பூர்த்தி செய்து பெருமை பெற்றார்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கஸ் அட்கின்சன் 118 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைக் குவித்தார்.
அவர் 8ஆவது விக்கெட்டில் மெத்யூஸ் பொட்டுடன் பெறுமதிமிக்க 85 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மெத்யூ பொட்ஸ் 21 ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டியின் முதல் நாளன்று ஜோ ரூட் 143 ஓட்டங்களையும் பென் டக்கட் 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 101 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM