“சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களை மீறினால் நாடு ஆபத்தில் சிக்கும்!”

Published By: Vishnu

30 Aug, 2024 | 05:55 PM
image

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் பிணைமுறிப் பத்திரதாரர்களுடன் செய்துகொண்ட இணக்கப்பாடுகளை இழந்து  நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் செல்லும் அபாயம் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

உழைக்கும் போது செலுத்தப்படும் வரியை திருத்தியமைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அது தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பதன்  பின்னர், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரிகள் குறைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

““ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  தேர்தல் விஞ்ஞாபனமான "ஐந்தாண்டு திட்டம் - இயலும்  ஸ்ரீலங்கா" இன்று வெளியிடப்பட்டது. பொருளாதார நெருக்கடியால் அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டை மீட்டு, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நாடாக மாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. வேறு யாரும் சவாலை ஏற்க  விரும்பவில்லை. மேலும் அந்த சவாலை ஏற்கும் திறன் அவர்களிடம் இருக்கவும் இல்லை.

நாம் கட்டியெழுப்பிய பொருளாதார ஸ்திரத்தன்மையை  முன்னோக்கிக் கொண்டு செல்வதை  ஐந்தாண்டுத் திட்டம் - இயலும் ஸ்ரீ லங்கா தேர்தல் விஞ்ஞாபனம்  அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து, கிடைக்கும் பயன்களை அதிகரிக்க வேண்டுமா என்பதை செப்டம்பர் 21ஆம் திகதி மக்கள் தீர்மானிப்பர்.

இந்த நேரத்தில், இந்நாட்டின் மிக முக்கியமான விடயம் பொருளாதாரம் ஆகும். பல தரப்பினரும் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தாலும், அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் இயலுமை பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட நாம்  இரண்டு வருடங்களில்  கடுமையாக உழைத்தோம்.

நாம் தோல்வியடைவோம் என்று நினைத்து சிரித்தவர்களும், நமது வேலைத் திட்டம் சீர்குலையும் என்று எண்ணியவர்களும் இன்று மக்கள் முன்வந்து வாக்குறுதிகளை அளிப்பது வேடிக்கையாக உள்ளது.

இதுவரை நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையின் பலன்கள் முறையாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நாடு பொருளாதார ரீதியில் பலமடையும் போது அதன் ஒரு பகுதியை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பயன்படுத்த வேண்டும். அடுத்த பகுதியை  மறுசீரமைப்பு  வேலைத்திட்டத்தின் போது எற்பட்ட பாதிப்பைக் குறைக்க  மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி எப்போதும் கூறிவந்தார். 

நாம் எமது  வரவு செலவுத்திட்ட  பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 5.2% ஆக வைத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால், மொத்த தேசிய உற்பத்தியில் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை 11.9% ஆக அதிகரிக்கும்.

மேலும், முதன்மைக் கணக்கின் இருப்பை நேர்மறை 2.3% ஆக பேணுவது எமது திட்டத்தின் முக்கிய இலக்காகும். ஆனால் எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால், முதன்மைக் கணக்கின் இருப்பு நேர்மறை 2.3% லிருந்து எதிர்மறை 4.3% ஆக குறையும். அதன்பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை செயல்படுத்த முடியாது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் சுமார் 1000 பில்லியன் ரூபா வரி நிலுவையில் உள்ளதாகவும் அவை முறையாக அறவிடப்படுவதில்லை எனவும் சில தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் 868 பில்லியன் ரூபாவுக்கு வரி மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டளவில் 188 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையாக இருந்ததுடன், 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 104 பில்லியன் ரூபா அந்த நிலுவைத் தொகையில் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எங்களது மறுசீரமைப்புத் திட்டம் வரி செலுத்துவோருக்கு சுதந்திரம் அளித்துள்ளதோடு, வரி முகாமைத்துவத்தையும் திறமையாக மாற்றியுள்ளது.” என்றார்.

வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடனத்திற்கு “இயலும்  ஸ்ரீலங்கா“ என்ற பெயரை தெரிவு செய்தமைக்கு விசேட காரணம் ஒன்று உள்ளது. 2022 இல், நம்மால் முடியாது என்று பலர் இந்த நாட்டைப் பொறுப்பெற்க விரும்பவில்லை. ஆனால் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது குழுவினரும் எவராலும் முடியாது என்று கூறிய அனைத்து விடயங்களையும் செய்து முடித்துள்ளனர்.

அதனால்தான் நமக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று கூறுகிறோம். மேலும் சவாலான சூழ்நிலைகளில், பயந்து ஓடுவது முக்கியம் அல்ல. அதை எதிர்கொள்வதுதான் முக்கியம். இந்தக் காரணங்களுக்காகவே இந்த ஐந்தாண்டு நடவடிக்கைக்கு "இயலும்  ஸ்ரீலங்கா" என்று பெயரிட்டுள்ளோம்.

www.ranil24.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இந்த விஞ்ஞாபனத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த அறிக்கை ஒரு கற்பனைக் கதை அல்ல.  இதில் உள்ள அனைத்து விடயங்களையும் எவ்வாறு செய்வது என்பது தெளிவாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு முடியாதது எதுவுமில்லை, கடந்த இரண்டு வருடங்களில் நாம் செய்தவற்றின் தொடர்ச்சிதான் இது. நாம் அடைந்த ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதுதான் இது.

இதன்படி, மக்களுக்கு சொத்துரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை முறையாகவும் துரிதப்படுத்தவும் தனி அதிகாரசபை நிறுவப்பட்டு, உறுமய திட்டத்தின் மூலம் இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமையும்  வழங்கப்படும். 

மேலும், கல்வித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி பல்கலைக்கழகங்களை விரிவுபடுத்தவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளை நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதேபோன்று பல்கலைக்கழக பட்டம் பெறாத முடியாதவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

மேலும், இந்த விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், பெண்களை வலுவூட்டும் வகையில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு 3 மில்லியன் வரை கடன் வழங்கப்படும்.

முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு விசேட கடனைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாட்டை அரச வங்கிகள் ஊடாக முன்வைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களுக்கு  நியாயமான நலனுக்காக தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்கும் திறனை அளிக்கிறது. இதற்கிடையில், தனியார் வங்கிகளுடன் இது குறித்து ஆலோசிக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும், அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கலை அறிமுகப்படுத்தி, இளைஞர் சமூகத்தை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது தொடர்பான கற்கைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தேவையான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதையும் கூற வேண்டும்.” என்றார்.

மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

“கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை பொருளாதார ரீதியில் பலப்படுத்திய வேலைத்திட்டத்தின் நீட்சியாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையை நாம் பார்க்கின்றோம். பொருளாதார நெருக்கடியால் தொழில்துறை சரிந்தது. ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐந்தாண்டுக் கொள்கைப் பிரகடனத்தில் அந்தத் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலைக் கல்வி முடித்து வெளியேறும் பிள்ளைகளுக்கு அரச துறை மற்றும் தனியார் துறையை இணைத்து தொழிற் பயிற்சிகளை நடத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் முப்பத்தைம்பதாயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41