மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய பரிகாரம்..!?

Published By: Digital Desk 7

30 Aug, 2024 | 03:49 PM
image

போட்டிகளும், சவால்களும் நிறைந்த இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் எம்முடைய பிள்ளைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்காக திட்டமிடும் பெற்றோர்களுக்கு கவனச் சிதறலால் ஈர்க்கப்படும் மாணவ சமுதாயத்தினரை கல்வியின் பக்கம் திசை திருப்புவது கடினமானதாக இருக்கிறது.

பாடசாலையில் 'ஓ' லெவல்  'ஏ' லெவல் மற்றும் உயர்கல்வியை கற்றுக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் தேர்வுகளில் சித்தி பெறுவதுடன் அதிக பெறுபேறுகளை பெற்று சாதனை படைப்பது தான் பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் எம்முடைய பிள்ளைகள் இளமை பருவத்திற்கே உரிய புற சமூகத்தில் வணிக நோக்கத்துடன் கூடிய கவர்ச்சியான விளம்பரங்களால் கவன சிதறலுக்கு ஆளாகிறார்கள்.

இந்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே கல்வி கற்கும் விடயத்தில் பாரிய முரண்பாடுகளும்,  கருத்தியல் இடைவெளிகளும் ஏற்படுவதுண்டு. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்தத் தருணத்தில் எம்முடைய பிள்ளைகள் கல்வி கற்பதில் கவனம் செலுத்தி, தேர்வுகளில் சித்தி பெறுவதற்கு எளிய பரிகாரம் இருக்கிறது என எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு புதன்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு ஏலக்காய் மாலை மற்றும் துளசி மாலையை சாற்றி, 'கல்வி கற்பதில் இருக்கும் மன தடைகளை அகற்றி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்' என பிரார்த்திக்க வேண்டும்.

அத்துடன் பெருமாள் ஆலயத்தில் பிரசாதமாக வழங்கப்படும் துளசி தீர்த்ததையும் பருக வேண்டும். அத்துடன் மாணவர்கள் நாளாந்தம் அந்த பெருமாள் ஆலயத்திலிருந்து சேகரித்து வரும் துளசி தீர்த்தத்தை இரவு உறங்குவதற்கு முன் சிறிது அருந்திவிட்டு உறங்க வேண்டும்.

இது உங்களது நினைவுத் திறனை மேம்படுத்தி தேர்வு தருணங்களில் சவாலும், நெருக்கடியும் மிக்க தருணங்களில் சிறப்பாக செயலாற்ற உதவி செய்யும். இந்த எளிய பரிகாரத்தை உங்களுடைய பிள்ளைகளுக்கு தெளிவாக எடுத்துரைத்து பெற்றோர்கள் பின்பற்றினால், பிள்ளைகள் கல்வி கற்பதில் சித்தி பெறுவதுடன் புலமை பரிசில்களையும் வென்று சாதனை படைப்பார்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35
news-image

கல்வியில் இருக்கும் தடையை அகற்றுவதற்கான சூட்சும...

2025-03-10 16:53:16
news-image

2025 ராகு - கேது பெயர்ச்சிப்...

2025-03-10 14:37:26
news-image

நிம்மதி ஏற்படுவதற்கான சூட்சம பரிகாரம்..!?

2025-03-09 13:12:58
news-image

ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் இதிகாச பாராயண...

2025-03-07 17:56:13
news-image

திருமண விடயத்தில் சுய முடிவை யார்...

2025-03-06 15:49:34