'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- நடிகர் சூரி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'விடுதலை- பார்ட் 2' எனும் திரைப்படம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை- பார்ட் 2' எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் நிறைவடையும் என்றும், இப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் இருபதாம் திகதி என்று பட மாளிகையில் வெளியாகும் என்றும் பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் வெளியான 'விடுதலை' படத்தின் முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது. இருப்பினும் படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் படத்தின் முதல் பாகத்தின் வெளியீட்டில் தயாரிப்பு நிறுவனம் லாபம் ஈட்ட வில்லை என்றும், இரண்டாம் பாகத்தின் வெளியீட்டின் போது தான் லாபம் ஈட்ட கூடும் என்றும் திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM