சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா இணைந்திருக்கிறார் என்பதை படக்குழுவினர் அவருடைய பிறந்தநாள் அன்று வாழ்த்துக்களுடன் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், மகேந்திரன், ஷோபனா, சௌபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ஏற்றிருக்கும் சிமோன் எனும் கதாபாத்திரத்தின் தோற்ற புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நடிகர் நாகார்ஜுனா தன்னுடைய எக்ஸ் தளத்தில், ''நன்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்! உங்களது இயக்கத்தில் வெளியான 'கைதி' படத்திற்கு பிறகு உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். படப்பிடிப்பில் பங்கு பற்றி, 'தலைவரு'டன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வமுடன் காத்திருக்கிறேன் '' என பதிவிட்டிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே வெற்றி சூத்திரத்தை 'கூலி' படத்திலும் பின்பற்றி இருக்கிறது என்பதும், 'கூலி' திரைப்படத்திலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய திரையுலகில் பிரபலமான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பதும், இதனால் இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக ஆயிரம் கோடி எட்டும் என தற்போது திரையுலக வணிகர்களால் அவதானிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM