(Bloomberg)
Anusha Ondaatjie
இலங்கையில் மார்க்சிச சோசலிசக் கொள்கையில் வேரூன்றிய ஒரு வேட்பாளர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஊழலை எதிர்த்து போராடுவது சீனாவுடனான முதலீட்டு ஒப்பந்தங்களை ஆராய்ந்து மற்றொரு கடன் பொறியைத் தவிர்ப்பது போன்ற வலுவான செய்திகளுடன் வேகம் பெற்றுவருகின்றார்.
2022ல் சக்தி வாய்ந்த ராஜபக்ச அரசாங்கத்தை அகற்றிய எதிர்ப்பாளர்களால் ஆதரிக்கப்படும் இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியை ஏகேடி என அழைக்கப்படும் அனுரகுமார திசநாயக்க வழிநடத்துகிறார். அவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒரு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்காக அதன் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைவாக காணப்படுகின்றது.
இரண்டு வருடத்திற்கு முன்னர் முன்னொருபோதும் இல்லாத பொருளாhதார நெருக்கடி வரலாற்றுரீதியான வங்குரோத்து நிலை ஆகியவற்றை சந்தித்த இலங்கை இன்னமும் பெரும் கடனில் சிக்குண்டுள்ள நிலையில் ஊழல் எதிர்ப்பு சுத்தமான நிர்வாகம் ஆகியவற்றை முன்வைத்து அனுரகுமார திசநாயக்க தனது பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார்.
. துறைமுகங்கள் சாலைகள் மற்றும் "தாமரை கோபுரம்" போன்ற லட்சிய திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக சீனாவின் கடன்கள் காரணமாக இலங்கையின் கடன் பல ஆண்டுகளாக அதிகரித்தது.
தனது பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன்சுமையை அதிகரிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன - சீனா இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றது.
கடந்த கால அரசாங்கங்கள் இலகுவாக பணத்தை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாடாக சீனா காணப்பட்டது ஆனால் எங்களின் அரசாங்கத்தின் கீழ்எதிர்கால முதலீடுகள் வீணாகாது அதனை நாங்கள் உறுதி செய்வோம் என்கின்றார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ஹரினி அமரசூரிய.
ஊழலை பற்றி கவலைப்படாமலிருப்பதையும் பயனற்ற திட்டங்களிற்கு இலகுவாக பணம் கிடைப்பதையும் நாங்கள் விரும்பவில்லை என்கின்றார் ஹரிணி அமரசூரிய. முன்னர் கல்விமானாக விளங்கிய இவர் தேசிய மக்கள் சக்தியின் நன்கறியப்பட்ட முகங்களில் ஒன்றாக மாறியுள்ளார்.
உலகின் எந்த நாட்டிடமும் நாங்கள் இதனையே எதிர்பார்க்கின்றோம் சீனாவிடமிருந்தும் இதனையே எதிர்பார்க்கின்றோம் என அவர் கொழும்பில் வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
இந்த கூட்டணியின் பிரதான கட்சி ஜேவிபி அனுரகுமார திசநாயக்க இதற்கு தலைமை தாங்குகின்றார்.
1970களிலும்இ 1988-89 ம் ஆண்டுகளிலும் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த கட்சி-ஜேவிபி தன்னை மறுசீரமைத்துக்கொண்டு தேசிய அரசியலில் நுழைந்தது.
செப்டம்பர் 21ம் திகதி தேர்தலில் திசநாயக்கவே முன்னணியில் காணப்படுகின்றார் என சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அவரின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பெருமளவு மக்களை காணமுடிகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும்ஊழலை அகற்றவேண்டும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச்சென்றமைக்காக ராஜபக்ச பரம்பரையை தண்டிக்கவேண்டும் என விரும்பும் 2022 ம் ஆண்டு ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆதரவை அனுரகுமார திசநாயக்க பெறுகின்றார்.
தமிழ் பிரிவினைவாதிகளுடனான தசாப்தகால நீண்ட உள்நாட்டு போரை ஈவிரக்கமற்ற முறையில் முடிவிற்கு கொண்டுவந்த ராஜபக்சாக்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தினார்கள்.
உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் சர்வதேச அளவில் இலங்கை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவேளை இலங்கைக்கு ஆதரவளித்த ஒரு சில நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதால் இடது சாரி கூட்டணி சீனாவுடன் உறவுகளை பேணவிரும்புகின்றது என ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
முக்கியமான தருணங்களில் சீனா எங்களை அரசியல்ரீதியாக ஆதரித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம் என அவர் தெரிவித்துள்ளார்.நாங்கள் அந்த உறவுகளை தொடர்ந்து பேணவிரும்புகின்றோம் என அவர் குறிப்பிடுகின்றார்.
இடதுசாரி வேட்பாளருக்கு காணப்படும் ஆதரவுஇலங்கையில் காணப்படும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரிக்கின்றது. இந்த அரசியல் நிச்சயமற்ற தன்மைகடன் வழங்கிய நாடுகளுடன் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகiளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பதை தாமதப்படுத்தலாம்
தேசிய மக்கள் சக்தியின்" கொள்கைகள் குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு சந்தைகளுக்கு கடந்த கால அனுபவம் இல்லை" என கொழும்பில் மூத்த பொருளாதார நிபுணர் திலின பண்டுவாவல தெரிவித்தார். "தேர்தல் மிக அருகில் உள்ளது அதனால்தான் சந்தைகளில் சில நிச்சயமற்ற தன்மை உள்ளது."
விக்கிரமசிங்கவின் கட்சியில் இருந்து பிரிந்த குழுவிற்கு தலைமை தாங்கும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனரஞ்சக குலத்தின் வாரிசான நாமல் ராஜபக்ச ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்காக விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அமுல்படுத்தும் சில வரி நடவடிக்கைகளுக்கு தமது கட்சி எதிராக இருப்பதாக அமரசூரிய கூறினார். அப்படியிருந்தும் முதன்மை இருப்பு மற்றும் கடன்-ஜிடிபி விகிதம் உட்பட கடன் திட்டத்தின் நிபந்தனைகள் "நியாயமான தரமானவை" என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆகஸ்ட் 26 அன்று வெளியிடப்பட்ட திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் பல வரித் திருத்தங்களையும் அரசாங்கச் செலவுகள் மீதான கூடுதல் மேற்பார்வையையும் முன்மொழிகிறது.
தற்போதைய நிர்வாகம் சமூக பாதுகாப்பு வலையமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் ஊழலை ஒழித்தல் உள்ளிட்ட வேறு சில சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு "போதுமான கவனம் செலுத்தவில்லை" என்று அமரசூரிய மேலும் கூறினார்.
ஊழலுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் கண்டிப்பாக அமல்படுத்தப்பட்ட நடத்தை நெறிமுறையின் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டிய அணுகுமுறை "மேலிருந்து அதை சுத்தம்" ஆகும் என்று அவர் கூறினார். அரசாங்க நியமனங்கள் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் கட்டுப்பாடுகள் இருக்கும் - இந்த இரண்டு இடங்களில் இருந்துதான் ஊழல் ஆரம்பமாகின்றது என ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஊழலை ஒழிப்பதன் மூலமும் அமைப்புகளை அமைப்பதன் மூலமும் கட்சி வணிகத்தை எளிதாக்கும் என்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் "பயப்பட ஒன்றுமில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
தமிழில் ரஜீபன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM