(நெவில் அன்தனி)
ராவல்பிண்டியில் பங்களாதேஷுக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஷஹீன் ஷா அப்றிடியை பாகிஸ்தான் அணி இணைத்துக்கொள்ளவில்லை.
வேகப்பந்துவீச்சாளர்களை மாத்திரம் பயன்படுத்தி முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களால் பங்களாதேஷிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் சுழல்பந்துவீச்சாளர் அப்ரார் அஹ்மதை அணியில் இணைத்துக் கொண்டுள்ளது.
அப் போட்டியில் பங்களாதேஷின் சுழல்பந்துவீச்சாளர்கள் மெஹிதி ஹசன் மிராஸ் (21 - 4 விக்.), ஷக்கிப் அல் ஹசன் (44 3 விக்.) ஆகிய இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானை திக்குமுக்காடவைத்ததை அடுத்து பிரதான சுழல்பந்துவீச்சாளர் ஒருவரை அணியில் இணைத்துக்கொள்ளதது எவ்வளவு பெரிய தவறு என்பதை பாகிஸ்தான் அணி புரிந்துகொண்டது.
முதலாவது போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெறுவதால் சுழல்பந்துவீச்சாளர் ஒருவரை பாகிஸ்தான் இணைத்துக்கொண்டுள்ளது.
6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி 38 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள அப்ரார், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் துரும்புச் சீட்டாக இருப்பார் என நம்பப்டுகிறது.
மறுபுறத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 14ஆவது டெஸ்ட் போட்டியில் வரலாற்று முக்கியம் வாய்ந்த முதலாவது வெற்றியை ஈட்டிய பங்களாதேஷ், இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்ற முயற்சிக்கவுள்ளது.
முதலாவது போட்டியில் முஷ்பிக்குர் ரஹிம் குவித்த 191 ஓட்டங்கள், ஷத்மான் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுள் ஹக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், மெஹிதி ஹசன் மிராஸின் சகலதுறை ஆட்டம் (77 ஒட்டங்கள், 4 விக்கெட்கள்) என்பன பங்களாதேஷை வெற்றிபெறச் செய்தன.
அவர்கள் அனைவரும் பங்களாதேஷுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த தொடர் வெற்றியை ஈட்டிக்கொடுக்க முயற்சிக்கவுள்ளனர்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பங்களாதேஷ் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிப்பதால் பாகிஸ்தான் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
அணிகள்
பாகிஸ்தான்: ஷான் மசூத் (தலைவர்), சவூத் ஷக்கீல், அப்ரார் அஹ்மத், அத்துல்லா ஷபிக், பாபர் அஸாம், குரம் ஷாஹ்ஸாத், மிர் ஹம்ஸா, மொஹமத் அலி, மொஹம்மத் ரிஸ்வான், நசீம் ஷா, சய்ம் அயூப், சல்மான் அலி அகா.
பங்களாதேஷ்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), ஷத்மான் இஸ்லாம், ஸக்கிர் ஹசன், மொமினுள் ஹக், முஷ்பிக்குர் ரஹிம், ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ராஸா, ஸசன் மஹ்முத், ஷொரிபுல் இஸ்லாம், நஹித் ராணா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM