இலங்கையில் கல்வியை மேம்படுத்துவதில் ஓயாத அர்ப்பணிப்பிற்கு பெயர்பெற்று விளங்குகின்ற Atlas Axillia, ஆரம்ப குழந்தைப் பருவ விருத்திக்கு உதவுகின்ற, அறிவை வளர்க்கும் பல்வேறுபட்ட புதிய வகை விளையாட்டுப் பொருட்களை Atlas Play Palz என்ற வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகப்படுத்தி, தனது அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு தடைவ வெளிக்காண்பித்துள்ளது. ஆகஸ்ட் 27 அன்று Trace Expert Cityஇல் இடம்பெற்ற உத்தியோகபூர்வ அறிமுக வைபவத்தில் Atlas Axillia மற்றும் Hemas Holdings ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
அறிவை வளர்க்க உதவுகின்ற விளையாட்டுப் பொருட்கள் சந்தையில் காலடி எடுத்துவைப்பது இந்த வர்த்தக நாமத்தைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக மாறியுள்ளதுடன், படைப்பாற்றல், தேடல் ஆர்வம் மற்றும் அறிவாற்றல் விருத்தி ஆகியவற்றை வளர்த்து, ஆரம்ப குழந்தைப் பருவ விருத்தியை மாற்றியமைப்பதே புதிய Atlas Play Palz விளையாட்டுப் பொருட்களின் நோக்கமாக உள்ளது. ‘உங்கள் குழந்தையிடமுள்ள அறிவுத்திறனை வெளிக்கொண்டு வாருங்கள்’ ('Unleash the Genius in Your Child) என்ற உத்வேகமளிக்கும் மகுட வாக்கியத்துடன், Block buddies, Mind buddies மற்றும் Craft buddies ஆகிய மூன்று தனித்துவமான விளையாட்டுப் பொருட்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளின் ஆரம்பப் பருவ விருத்தித் தேவைகள் மற்றும் பல்வகைப்பட்ட ஆர்வங்களுக்கான தீர்வாக இவை அமைந்துள்ளன. அறிவாற்றல், உணர்வுபூர்வம் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றை விருத்தி செய்கின்ற, ஈடுபாடுகளை வளர்க்கின்ற, நேரடி கற்றல் அனுபவங்களுக்கு வழிகோலுகின்ற வகையில் இவை மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளன.
Atlas Axillia நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அசித சமரவீர நிகழ்வில் உரையாற்றுகையில்,
“Play Palz விளையாட்டுப் பொருட்களின் அறிமுகம் Atlas Axillia நிறுவனத்தைப் பொறுத்தவரையில் முக்கியமானதொரு சாதனை இலக்காக மாறியுள்ளதுடன், படைப்பாற்றல் மற்றும் குழந்தையின் விருத்தியை மேம்படுத்துவதில் அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் வகிக்கின்ற முக்கியத்துவத்தை இனங்கண்டுள்ள நாம், தற்போது இத்துறையில் கால்பதித்துள்ளோம். குழந்தைகள் தம்முடைய அறிவாற்றலை வெளிக்கொண்டுவந்து, சாதிப்பதற்கு உதவுவதற்கு அவர்களுக்கு உத்வேகமளித்து, அறிவைப் புகட்டுகின்ற பொருட்களை பங்களிப்பாக வழங்குவதே Atlas PlayPalz விளையாட்டுப் பொருட்களை அறிமுகப்படுத்துவதன் நோக்கம்” என்று குறிப்பிட்டார்.
சிறுவர் உளவியல் நிபுணரான வைத்தியர் பீனுக விக்கிரமதுங்க ஆரம்ப குழந்தைப்பருவ விருத்தியில் அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்களின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டுகையில்,
“ஆரம்ப குழந்தைப ;பருவ விருத்தியில் விளையாட்டு என்பது ஒரு அடிப்படை அம்சமாகும். குழந்தைகளின் வளர்ச்சி வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு அறிவை வளர்க்கும் அனுபவங்களில் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்பதால், இந்த முக்கியமான பராயத்தில் குழந்தைகளின் அறிவாற்றலின் விருத்தியை விரிவுபடுத்தும் வகையில் Atlas PlayPalz விளையாட்டுப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
ஆரம்ப குழந்தைப் பருவ விருத்தியை மேம்படுத்தல் மற்றும் குழந்தைகளுக்குள் உள்ள அறிவுத்திறனை வெளிக்கொண்டு வருவதில் அறிவை வளர்க்கின்ற விளையாட்டுப் பொருட்களின் அத்தியாவசியமான பங்கு தொடர்பில் மதிப்புமிக்க வல்லுனர்கள் அடங்கிய கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இங்கு இடம்பெற்றது. கல்விப் பாடவிதானத்தில் அறிவை வளர்க்கின்ற விளையாட்டுப் பொருட்களை உள்ளடக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டது.
Atlas Axillia முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அசிதசமரவீர, Atlas Axillia புதிய வணிகத் துறை தலைமை அதிகாரி ஷொஹீன் ஹமீத், சிறுவர் உளவியல் நிபுணரான வைத்தியர் பீனுகா விக்கிரமதுங்க, விருது பெற்ற முன்னணி கல்வித் துறை சார்ந்தவரும், Wiz Kidz Internationalஇன் பணிப்பாளருமான அஞ்சலிகா விஜேசிங்க ஆகியோர் இக்கலந்துரையாடல் குழுவில் இடம்பெற்றனர்.
Atlas PlayPalz அறிமுகத்திற்குப் புறம்பாக, சீரான, ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட கட்டமைப்பினைத் தோற்றுவிக்கும் வகையில் Genius Zones, Genius Roots மற்றும் Genius Insights ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விளையாட்டுப் பொருட்கள் தொடர்பான நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில், நிகழ்விற்கு வருகைதந்தவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தி, கற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறித்த நேரடி விளக்கங்கள் Genius Zones மூலமாகக் கிடைக்கப்பெற்றன. டிஜிட்டல் மற்றும் நேரடி அனுபவங்களுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் இந்த விளக்கமளிப்பு அமர்வுகளில் இடம்பெற்றதுடன், ஆரம்ப குழந்தைப் பருவ விருத்தியில் பெற்றோருக்கு வளங்கள் மற்றும் பயனுள்ள தகவல் விபரங்களை Genius Roots வழங்கியது. ஈடுபாடு கொண்ட வீடியோ பயிற்சிகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அறிந்துகொள்ளும் நிபுணத்துவ விளக்கங்களை Genius Insights வழங்கியது.
PlayPalzஇன் நோக்கத்தை அடையப்பெற்று, ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உள்ள அறிவாற்றலை வெளிக்கொண்டுவருதில் தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் வெளிப்படுத்தினர். Atlas PlayPalzஇன் வழிநடத்தலில், இலங்கையில் அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் ஒவ்வொரு குழந்தையும் கொண்டுள்ள ஆற்றலை வெளிக்கொண்டு வருவதை உறுதிசெய்து புதிய உச்சங்களை எட்டுவதற்கு வழிகோலும்.
Atlas Axillia Company (Pvt) Ltd நிறுவனத்தின் அறிவை வளர்க்க உதவுகின்ற விளையாட்டுப் பொருள் வர்த்தக நாமமான Atlas PlayPalz ஆனது 60 ஆண்டுகால பாரம்பரியத்துடன், இலங்கையிலுள்ள மிகவும் நன்மதிப்புப் பெற்ற வர்த்தக நிறுவனங்களில் ஒன்றின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்துவருவதுடன், மிகச் சிறந்த வடிவமைப்பு, தொழிற்பாடு மற்றும் சிக்கனமான விலை ஆகியவற்றுடன் குழந்தைகளுக்கான அறிவை வளர்க்கும் உபகரணங்களைப் பொறுத்தவரை நாட்டின் மிகப் பாரிய உற்பத்தி நிறுவனமாகத் திகழ்வதுடன், கற்றல் கட்டமைப்பில் முன்னிலை வகித்துவருகின்றது. “எதிர்கால தலைமுறைகளின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொண்டு வருதல்” (Unleashing the Potential of Future Generations) என்ற இலக்கில் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருகின்ற Atlas Axillia ஆனது கற்றல் அனுபவத்தை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் உயர் தர மற்றும் இலகுவான பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் பொருட்களை வழங்கிவருவதுடன், Hemas Holdingsஇன் பெருமை மிக்க துணை நிறுவனமாக, கல்விப் பயணத்தை முழுமையான மற்றும் மகிழ்வளிக்கும் அனுபவமாக மாற்றி, அனைவருக்கும் உத்வேகமளித்து வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM