வட கிழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதிக்கான பயணம்" எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சி இன்று (29) மட்டக்களப்பில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில் 150க்கு மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா கலந்துகொண்டு நீதிக்கான பயணம் எனும் ஓவியக் கண்காட்சியை திறந்துவைத்தார்.
இந்த ஓவிய காண்பிய நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள 500க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்கள் இதில் பங்கேற்று ஓவியங்களை பார்வையிட்டிருந்தனர்.
இந்த ஓவிய கண்காட்சியில் தமிழ் மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM